தீபாவளி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் இனிப்புகள் விற்பனை உச்சத்தில் இருந்து வருகிறது. இதனிடையே இனிப்புகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்து வருவதால், குறிப்பாக பண்டிகை காலங்களில் இனிப்புகள் வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் இனிப்பு கடைகளில் அதிரடியாக சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதன்போது குவிண்டால் கணக்கில் இனிப்புகள், பேக்கரி மற்றும் பால் பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு அழிக்கவும் செய்யப்பட்டன. இந்த நிலையில் லூதியானா மாவட்ட சுகாதார அதிகாரி (DHO) அமர்ஜித் கவுர் பேசுகையில் “கலப்படத்தை கண்டறிய இனிப்புக் கடைகள் மற்றும் பிற உற்பத்தி யூனிட்ஸ்களில் நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்தாலும், இனிப்புகள் உள்ளிட்ட பிற உணவுகளை வாங்கும் மக்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன” என்று குறிப்பிட்டார்.
பண்டிகையை கொண்டாட இனிப்புகளை வாங்கும்போது கலர்ஃபுல்லாக இருக்கும் இனிப்புகளை வாங்காமல் முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள் அல்லது குறிப்பிட்ட கடை அல்லது நிறுவனம் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகரித்துள்ள வண்ணங்களைப் பயன்படுத்தி இருக்கின்றனரா என்று உறுதி செய்து கொண்டு பின்னர் வாங்குங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இனிப்புகளை பொறுத்தவரை நிறங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அவை சுவையை கூட்டுவதில்லை, மாறாக தோற்றத்தை மட்டுமே அழகாக காட்டுகின்றன. சில இனிப்பு உற்பத்தியாளர்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும் வண்ணங்களை இனிப்புகளில் பயன்படுத்துகிறார்கள். எனவே குறிப்பிட்ட கடையின் இனிப்புகளில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் FDA-வால் அங்கீகரிக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துவது மிக முக்கியம் என்றார்.
இதையும் படிக்க:
“தங்கத்தின் விலை சவரனுக்கு விரைவில் ரூ.1 லட்சத்தை எட்டும்…” – நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் முன்வைக்கும் காரணம்!
சில்வர் ஃபாயிலுக்குப் பதிலாக அலுமினியம் ஃபாயில்
லூதியானாவை பொறுத்தவரை இந்த மாதம் துவக்கம் முதலே இனிப்புக் கடைகளில் வழக்கமான அடிப்படையில் சோதனைகளை நடத்தி வருவதாகவும், சோதனையின்போது தீங்கு விளைவிக்கும் வண்ணங்கள் சேர்க்கப்பட்ட இனிப்புகள், பேக்கரி மற்றும் பால் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்ட சேம்ப்பிள்ஸ் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதேபோல ஆய்வுகளின்போது சுகாதார அதிகாரிகள் கண்டறிந்த முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, சில கடைகள் இனிப்புகளில் சில்வர் ஃபாயிலுக்குப் பதிலாக தீங்கு விளைவிக்கும் அலுமினியம் ஃபாயிலை பயன்படுத்தியது என குறிப்பிட்டார்.
இதையும் படிக்க:
பேக்கிங் செய்ய அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவது ஆபத்தா..? தவிர்க்க வேண்டிய தவறுகள்..!
விரல்களுக்கு இடையில் தேய்ப்பதன் மூலம் ஃபாயிலை ஸ்வீட் வாங்கும் இடத்திலேயே சரிபார்க்கலாம் என DHO குறிப்பிட்டார்.இது குறித்து விளக்கம் அளித்த அவர், உங்கள் விரல்களுக்கு இடையில் வைத்து ஒரு பீஸ் ஃபாயிலை எடுத்து தேய்க்கவும். அந்த ஃபாயில் தேய்ந்து காணாமல் போனால் அது சில்வர் ஃபாயில்தான் என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதுவே உருண்டையாக மாறினால் அது அலுமினியம் ஃபாயில் என்று விளக்கினார்.
மேலும் நீங்கள் வாங்கும் இனிப்புகள் தூசு மற்றும் ஈக்களால் மாசுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த, வாங்க செல்லும் கடைகளில் பராமரிக்கப்படும் சுகாதாரத்தை சரிபார்த்த பிறகு நன்கு மூடி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை வாங்க பரிந்துரைத்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
