கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தை கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்படக் கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன.
தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று மல்லிகை ரூ.400க்கும், பிச்சி ரூ.300க்கும், சம்பங்கி ரூ.300க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை எதிரொலி… விண்ணை முட்டும் வாழை இலைக்கட்டு விலை…
அதன்படி, பிச்சிப்பூ கிலோ ரூ.1250க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.1500க்கும், அரளிப்பூ கிலோ ரூ.250க்கும், வாடாமல்லி கிலோ ரூ.20க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.100க்கும், சம்பங்கி கிலோ ரூ.500க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.600க்கும், ரோஸ் கிலோ ரூ.250க்கும் விற்பனையாகிறது.
மேலும், ஸ்டெம்ப்ரோஸ் ஒரு கட்டு ரூ.300க்கும், துளசி கிலோ ரூ.50க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.20க்கும், மரிக்கொழுந்து கிலோ ரூ.150க்கும், செவ்வந்தி கிலோ ரூ.200க்கும். விற்கப்படுகிறது.
இதுகுறித்து தோவாளை மலர் சந்தையைச் சேர்ந்த கலைச்செல்வன் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக உள்ளூர் பூக்களின் உற்பத்தி குறைவாக உள்ளது. குமரி மாவட்டத்திற்கு வேறு மாவட்டங்களிலிருந்து பூக்களை இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகம் இருப்பதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)