கோலாலம்பூர்:
திரையரங்குகளை திறப்பதற்கு ஒருபோதும் தடை விதிக்கவில்லை என கிளந்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதேநேரம் விரும்பத்தகாத செயல்கள் நடைபெறாது இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு, பல்வேற்று விதிமுறைகளை திரையரங்கு நடத்துனர்கள் பின்பற்ற வேண்டும் என்றும், அது தொடர்பில் மாநில அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாகவும் அம்மாநில இஸ்லாமிய மேம்பாட்டு, தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்ரி மாட் டவுட் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிறுவனங்களின் விண்ணப்பத்தின் அடிப்படையில், கிளாந்தான் மாநிலத்தில் திரையரங்குகளை மீண்டும் திறக்க மாநில அரசு அனுமதி வழங்கினால், மிகவும் கட்டுப்பாடான விதிமுறைகள் விதிக்கப்படும் என்று அவர் சொன்னார்.


