மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவமனையில் உயிரிழந்த கணவரின் படுக்கையில் இருந்த ரத்தத்தை துடைக்குமாறு கர்ப்பிணி மனைவியை மருத்துவமனை ஊழியர்கள் கட்டாயப்படுத்தியதாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள லால்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 65 வயதான தரம் சிங் மராவி, இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவரது குடும்பத்தினருக்கும், மற்றொரு குடும்பத்தினருக்கம் இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த அக்டோபர் 31ம் தேதி சுமார் 25 பேர் அடங்கிய கும்பல் ஒன்று தரம் சிங் மராவி குடும்பத்தினர் மீது சரமாரித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பயங்கரமான ஆயுதங்களால் நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில் தரம் சிங் மராவியும் அவரது மகன்களில் ஒருவரான ரகுராஜும் சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு மகனான சிவராஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ये महिला सरकारी अस्पताल के जिस बिस्तर को साफ कर रही है उस पर थोड़ी देर पहले इनका पति लेटा था 5 महीने की गर्भवती है अस्पताल ने कथित तौर पर मौत के बाद बिस्तर इनसे साफ करवाया डिंडोरी में तिहरे हत्याकांड का मामला है इसके आगे मानवता और शब्द मर जाते हैं
श्रद्धांजलि… pic.twitter.com/IuDzX3kYM8— Anurag Dwary (@Anurag_Dwary) November 1, 2024
இந்நிலையில், 5 மாத கர்ப்பிணியான சிவராஜின் மனைவி, மருத்துவமனை படுக்கையில் உயிரிழந்த சிவராஜின் ரத்த கறையை துடைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை சார்பில் நோட்டிஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவர் சந்திரசேகர், அந்த பெண் தனது கணவனின் ரத்தக்கறை படிந்த துணிகளை மட்டுமே சேகரித்தார் எனவும், படுக்கையை சுத்தம் செய்யுமாறு அவரை யாரும் வற்புறுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த படுகொலை சம்பவத்தில் 7 பேர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் மருத்துவமனை மீது விசாரணைக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)