அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுவார் என்று அந்த அணி வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆகிவிட்டன.
எனினும் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தோனி விளையாடி வருகிறார். 43 வயதாகும் தோனி, அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், தோனி விளையாடுவாரா இல்லையா என்பதை அறிய இந்த மாத இறுதி வரை காத்திருக்க வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியிருந்தார்.
இந்நிலையில் தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காசி விஸ்நாதன், அடுத்தாண்டு தோனி விளையாடுவார் என்று தெரிவித்தார்.
ரவீந்திர ஜடேஜா,ருதுராஜ் கெயிக்வாட்,பதீரனா,ஷிவம் துபே மற்றும் டெவான் கான்வே ஆகியோரை சிஎஸ்கே அணி தக்கவைத்துக்கொண்டதாகவும் அன்கேப்டு வீரராக தோனி அணியில் தொடர்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க – டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்… குவியும் பாராட்டு
சர்வதேச போட்டியில் விளையாடி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆன வீரர்களை அணி நிர்வாகத்தினர் அன்கேப்டு வீரராக வைத்துக்கொள்ளும் வகையில் அண்மையில் பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தோனி அடுத்தாண்டு ஐபிஎல்லில் விளையாடுவார் என்ற தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
