உலக நாடுகளில் மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் ஏராளமானோர் அன்றாடம் உணவைப் போன்று மது குடித்து வருகின்றனர். இதனால் ஏராளமான தீமைகள், உடல் நலத்திற்கு கெடுதி என்று பல பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை மது பிரியர்கள் பொருட்படுத்துவதில்லை.
மதுவுக்கு குறைந்த வரி விதிக்கப்படுவதால் பாண்டிச்சேரியில் குறைந்த விலைக்கு மது கிடைக்கிறது. இதனால் வார இறுதி நாட்களில் புதுச்சேரி எல்லையையொட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் இருந்தும் மது பிரியர்கள் புதுவை செல்சின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவிலேயே கோவாவில்தான் மிக மிக குறைந்த விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே புதுச்சேரியை விடவும் கோவாவில் மதுபான பாட்டில்களுக்கு மிகக்குறைந்த வரி விதிக்கப்படுகிறது. அங்கு ரூ. 100-க்கு விற்பனையாகும் மது பாட்டில் டெல்லியில் ரூ.134 க்கும், கர்நாடகாவில் ரூ.513-க்கும் விற்பனை செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் மது பாட்டில்களுக்கான வரி மிக மிக அதிகமாகும். பல்வேறு உள்ளூர் வரிகளின் விளைவாக, டெல்லி மற்றும் மும்பை இடையே பிரபலமான ஸ்காட்ச் பிராண்டுகளுக்கு 20%க்கும் அதிகமான விலை ஏற்றத்தாழ்வு உள்ளது. உதாரணமாக, டெல்லியில் சுமார் ரூ.3,100 விலையுள்ள பிளாக் லேபிளின் ஒரு பாட்டில், மும்பையில் தோராயமாக ரூ.4,000 ஆக உள்ளது.
வரி வித்தியாசம் காரணமாக சட்ட விரோதமான முறையில் குறைவான வரி விதிக்கப்படும் பகுதிகளில் இருந்து அதிக வரி விதிக்கப்படும் பகுதிக்கு மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள் :
நாதக நிகழ்ச்சியில் மாற்றப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து… புது விளக்கம் அளித்த சீமான்
பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளைப் போலல்லாமல், மது மற்றும் பெட்ரோலியம் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) வரம்புக்கு வெளியே உள்ளது. இதன் விளைவாக நாடு முழுவதும் பல வரிகள் மற்றும் வரி விகிதங்கள் மதுபாட்டில்களுக்கு உள்ளன. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் மது பாட்டில் விலை மாறுபடுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)