இன்னும் சில ஆண்டுகளுக்கு விளையாட விரும்புவதாக சிஎஸ்கே வீரர் தோனி தெரிவித்திருப்பதால் அவர் அடுத்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விவரங்களை அறிவிக்க வரும் 31-ம் தேதியே கடைசி நாள். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சிஎஸ்கே அணியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தக்க வைக்கப்படுவாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதற்கு அவரே பதில் கொடுத்துள்ளார்.
கோவாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ‘‘தொழில்முறை விளையாட்டில் வீரர்கள் அடிக்கடி நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்’’ என்று கூறினார். தனது கடைசி ஆண்டுகளில் கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக விளையாட விரும்புவதாகவும், இன்னும் சில ஆண்டுகள் இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க விரும்புவதாகவும் தோனி தெரிவித்தார். இதனால், அவர் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடுவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Also Read |
கேரள முதல்வர் சென்ற கார் திடீர் விபத்து – அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி
ஐபிஎல் 2025 தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை வரும் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே தோனியை சிஎஸ்கே அணி தக்க வைக்குமா என்பது இன்னும் ஒரு சில தினங்களில் தெரியவரும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
