• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“பல கோடி மதிப்புள்ள பழமையான சிலை, அமெரிக்காவில் ஏலம் போவதை மீட்க வேண்டும்'' – பொன் மாணிக்கவேல்!

GenevaTimes by GenevaTimes
November 2, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
“பல கோடி மதிப்புள்ள பழமையான சிலை, அமெரிக்காவில் ஏலம் போவதை மீட்க வேண்டும்'' – பொன் மாணிக்கவேல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கோவில்தேவராயன்பேட்டையில் உள்ள மத்ஸபுரீஸ்வரர் கோயிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் வந்தார். பின்னர், கிராம மக்களுடன் சேர்ந்து, கடந்த ஜூன் 14-ம் தேதி கோயிலின் தெற்கு பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 13 சிலைகளை மீண்டும் இந்தக் கோயிலிலேயே வழிபாட்டிற்கு வைக்க வேண்டும், இந்தக்கோயிலை பாதுகாக்கப்பட்ட புராதன கோயிலாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோயிலில் உள்ள விநாயகர் மற்றும் அம்மன் சிலையிடம் மனுவாக கொடுத்து வழிபட்டார்.

அமெரிக்காவில் உள்ள போகசக்தி அம்மன் பஞ்லோக சிலை
“கன்னியாகுமரி புவன நந்தீஸ்வரர் கோயிலைக் காணவில்லை!” – பொன் மாணிக்கவேல் அதிர்ச்சித் தகவல்

இதையடுத்து முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பாரந்தங்கச் சோழனால் கட்டப்பட்ட 1063 ஆண்டுகள் பழமையான இக்கோயிலுக்கு ஏராளமான தெய்வ திருமேனிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மத்ஸபுரீஸ்வரர் கருவறையில் இருந்த போக சக்தி அம்மனின் பஞ்லோக சிலை கடந்த 1974-ம் ஆண்டு முதல் மாயமானது. இச்சிலையானது தற்போது நியூயார்க் நகரத்தில் மேன்ஹாட்டனில் உள்ள ஏலக் கூடத்தில் உள்ளது.

பல கோடி மதிப்பு கொண்ட இச்சிலையை தற்போது ஏலத்திற்கு விடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே மத்திய, மாநில அரசுகள் இதை தடுத்து நிறுத்தாவிட்டால் வசதிபடைத்தவர்கள் சிலையை ஏலத்தில் எடுத்து விடுவார்கள்.

எனவே, இது தொடர்பாக எம்.எல்.ஏ., எம்.பி, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். மேலும், இந்தச் சிலையை மீட்டு திருவாரூரில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்காமல் கோயிலிலேயே வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தொகுதி எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய, மாநில தொல்லியல்துறை அதிகாரிகள், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் ஒரு குழுவாக, விரைவில் புதுடில்லிக்கு சென்று பிரதமரைச் சந்தித்து, அந்தச் சிலை ஏலத்தை நிறுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இச்சிலை தொடர்பாகக் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராம மக்களுடன் பொன் மாணிக்கவேல்
மாநில அந்தஸ்துக்கு குறி, அமைச்சரவையில் காங்கிரஸ் இல்லை -காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மூவ் என்ன?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயிலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிலைகள் எங்கு உள்ளது என்பதை அதிகாரிகள் கூற மறுக்கிறார்கள். இது தொடர்பாகக் கோயில் செயல் அலுவலர் பதில் கூறவில்லை என்றால், அவரை கோயிலுக்கு உள்ளே விடக்கூடாது. மேலும், கோயில் வருமானத்தில் ஊதியம் பெறும் அவர், 14 சிலைகள் குறித்து, கிராம மக்களுக்கு தெரிவித்து, அந்தச் சிலைகளை உடனே கோயிலில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்த போது 2,622 சிலைகளை அமெரிக்காவில் இருந்து மீட்டுள்ளேன். ஓய்வு பெற்ற பிறகு 8 சிலைகள் தொடர்பாக நெருக்கடி கொடுத்து புகார் அளித்தேன். சிலைகள் காணாமல் போனவை குறித்தும், கோயில்களில் நடைபெறும் மோசடி போன்றவை குறித்து புகார் கொடுத்தால் காஞ்சிபுரம், தஞ்சாவூர் போன்ற சில மாவட்ட எஸ்.பி.க்கள் எப்.ஐ.ஆர் போடுவதற்கு கூட தயக்கம் காட்டுகின்றனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளேன். மத்ஸபுரீஸ்வரர் கோயிலில் 14 சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சுற்றுப் பகுதிகளை இந்தியத் தொல்லியியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.

Read More

Previous Post

எரிபொருள் விலை இன்று குறையும் சாத்தியம்

Next Post

குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றங்கள் 2023 இல் 26.5 % அதிகரிப்பு – Malaysiakini

Next Post
குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றங்கள் 2023 இல் 26.5 % அதிகரிப்பு – Malaysiakini

குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றங்கள் 2023 இல் 26.5 % அதிகரிப்பு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin