நீலகிரி மாவட்டம் அதிக அளவில் விவசாயம் செய்யும் ஒரு முக்கிய விவசாயம் மாவட்டமாக விளங்குகிறது. இங்கு அதிக அளவில் கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ், வெள்ளைப் பூண்டு மற்றும் ஆங்கிலக் காய்கறி வகைகள் மற்றும் தேயிலை ஆகியவை அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.
நீலகிரியில் காய்கறிகளைத் தாண்டி வெள்ளைப் பூண்டு அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. மழை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நல்ல விளைச்சல் எடுக்க முடியும் என்பதால் விவசாயிகள் விரும்பி வெள்ளைப் பூண்டு விவசாயம் செய்கிறார்கள்.
கடந்த மாதங்களில் வெள்ளைப் பூண்டு கிலோ 500 வரையிலும் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்பொழுது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகப் பூண்டு விளைச்சல் சற்று குறைவாக உள்ளது, இருப்பினும் கிலோ ரூபாய் 250 வரையிலும் விற்பனையாவதால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: வன்னி மரமும் வில்வ மரமும் அருகருகே… வால முருகனை வழிபட்டால் குழந்தைப் பாக்கியம் நிச்சயம்…
வெள்ளைப் பூண்டு விவசாயத்தில் அதிக பராமரிப்பு கூலி செலவு, எருவு மருந்து என அதிக வேலைப்பாடு உள்ளது. இருந்தாலும் இந்த முறை வெள்ளைப் பூண்டு சிறந்த விலை நல்ல நிலையில் இருப்பதால் அதிக அளவில் வெள்ளைப் பூண்டு விளைவிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
வெள்ளைப் பூண்டு விவசாயம் குறித்து கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி கூறுகையில், “20 வருடங்களாக மழை காய்கறிகளைப் பயிர் செய்து வருகிறோம். இந்த முறை மழையின் காரணமாகப் பூண்டு பெரிய அளவில் வளரவில்லை. ஆனால் விலை நல்ல நிலையில் இருப்பதால் சற்று ஆறுதலாக உள்ளது.
ஒவ்வொரு முறை மழை பொழியும் பொழுதும் பயந்து பயந்து வாழ வேண்டி உள்ளது. வெள்ளைப் பூண்டு மருந்துகள் அதிக விலையில் இருப்பதால் முதலீட்டுக்கு அதிக அளவில் செலவாகிறது. தற்பொழுது மார்க்கெட் விலையில் 350 முதல் 400 வரை விற்பனை ஆவதால் போதுமானதாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
