வங்கி ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் எனவும், இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கோரிக்கைக்கு டிசம்பர் 2024 இறுதிக்குள் நிதியமைச்சகத்தின் இறுதி முடிவு கிடைக்கும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரசு ஒப்புதல் அளித்தால், வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வங்கிகள் திறக்கப்படும். அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படும்.
இது தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களுக்கு இடையே ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்த ஒப்புதலால் வாடிக்கையாளர்களின் சேவை நேரம் குறைக்கப்படாது என வங்கி ஊழியர் சங்கங்கள் உறுதி அளித்துள்ளன. இதை உறுதி செய்வதற்காக, வேலை நேரம் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 2024இல், அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பானது (AIBOC), வங்கி ஊழியர்களின் நல்வாழ்வுக்காகவும், வங்கித் துறையின் செயல்திறனை மேம்படுத்தவும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை நிதி அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு வலியுறுத்தினர்.
மேலும், உலகளவில் அனைத்து துறைகளிலும், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை, இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கின்றனர். இந்த நடைமுறையானது உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது, செயல்திறனை அதிகரிக்கிறது, வேலை தொடர்பான மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிக்க:
Gold vs Silver | பண்டிகை காலத்தில் முதன்முறையாக தங்கத்தை மிஞ்சிய வெள்ளி விற்பனை… முழு விவரம் இதோ!
இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்கள் சங்கத்தினர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
இதனையடுத்து கடந்த மார்ச் 8, 2024 அன்று ஐபிஏ மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்புக்கு இடையே ஐந்து நாட்கள் வேலை மற்றும் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு ஏற்ப திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டமானது தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மத்திய அரசு சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் டிசம்பர் மாத இறுதிக்குள் மத்திய அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க:
UPI லைட் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்! – இரு புதிய அம்சங்கள் அறிமுகம்.. என்ன தெரியுமா?
மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், செக்ஷன் 25ன் கீழ் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை நாட்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். மேலும், தினமும் காலை 9.30 மணிக்கு பதில் காலை 9 மணிக்கு வங்கிகள் செயல்பட தொடங்கும். மாலை 5.30 மணிக்கு பதில் 5.40 மணி வரை வங்கிகள் செயல்படும். இருப்பினும் மக்களுக்கான சேவை என்பது காலை 10 மணி முதல் 4 மணி வரை மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒவ்வொரு மாதமும் 2-4வது சனிக்கிழமை மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் மூடப்படுகின்றன. இது தவிர, பண்டிகை காலங்களிலும் வங்கிகள் மூடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
