தில்லியில் நவ 7-ஆம் தேதி சத் பூஜையையொட்டி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சத் பூஜை தீபாவளிக்கு ஆறு நாள்களுக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது. மேலும், இது முக்கியமாக பிகாா், ஜாா்க்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சத் பூஜையையொட்டி நவம்பர் 7-ம் தேதி தில்லியில் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் சக்சேனா முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

