காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன். நவம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
பன்னூன் குறிப்பிட்ட தேதிகளில் காலிஸ்தான் இனப்படுகொலையின் 40-வது ஆண்டு நினைவும் சரியாக பொருந்திவருகிறது. அந்த தேதிகளில் ஏர் இந்தியா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பன்னூன் கூறியிருக்கிறார்.
நீதிக்கான சீக்கியர் அமைப்பின் (Sikhs For Justice – SFJ) நிறுவனரான பன்னூன், கடந்த ஆண்டும் இதேத் தேதிகளில் இதேப் போன்ற எச்சரிக்கைகளை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

