• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

1 லட்சம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான புதிய திட்டம் – முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி!

GenevaTimes by GenevaTimes
October 31, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
1 லட்சம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான புதிய திட்டம் – முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சர் ஹெச்என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் (Sir HN Reliance Foundation Hospital) 10-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான நீடா எம்.அம்பானி, ஒரு புதிய சுகாதார சேவா திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் பின்தங்கிய நிலையில் உள்ள 1,00,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க உறுதியளித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இந்த புதிய திட்டமானது 50,000 குழந்தைகளுக்கு பிறவி இதய நோய் பரிசோதனை, 50,000 பெண்களுக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை மற்றும் 10,000 இளம்பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசிகள் உட்பட முக்கியமான சுகாதார சேவைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதுகுறித்து பேசிய நீடா எம். அம்பானி, எளிதில் அணுகக்கூடிய சுகாதார வசதிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “சர் ஹெச்என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையானது, உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவையை ஒவ்வொரு இந்தியருக்கும் எளிதில் அணுகக்கூடியதாகவும், மலிவு விலையில் வழங்கவும் 10 ஆண்டுகளாக எங்கள் தொலைநோக்குப் பார்வையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மைல்கல்லை கொண்டாடும் வேளையில், நாங்கள் ஒரு புதிய சுகாதார சேவா திட்டத்தை, பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளோம். நல்ல ஆரோக்கியமே ஒரு வளமான தேசத்தின் அடித்தளம். மேலும் ஆரோக்கியமான பெண்களும் குழந்தைகளுமே வளரும் சமுதாயத்தின் அடித்தளமாக இருப்பார்கள் என்பதை நாங்கள் உளமார நம்புகிறோம்” என்றார்.

சர் ஹெச்என் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் அதன் பத்தாண்டு கால பயணத்தில், உயர்தர சுகாதார சேவைகள், மேம்பட்ட மருத்துவ பராமரிப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் 1.5 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 2.75 மில்லியன் இந்தியர்களின் வாழ்க்கையை ஏதோ ஒரு விதத்தில் சரி செய்துள்ளது.

இதையும் படியுங்கள் :
இந்திய ரயில் கழிவறையின் மோசமான நிலை! முகம் சுளித்த வெளிநாட்டு பயணி!

மேலும் இந்த மருத்துவமனை 500-க்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்துள்ளதோடு, 24 மணி நேரத்திற்குள் 6 உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி பல உயிர்களை காப்பாற்றி தேசிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் சிறந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, மும்பையில் உள்ள மிகப்பெரிய தங்க சான்றிதழ் பெற்ற பசுமை மருத்துவமனை என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

விளம்பரம்

இந்த மருத்துவமனையின் அர்ப்பணிப்பு இந்திய மக்களைப் பாதிக்கும் முக்கியமான உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்ப்பது வரை விரிவடைந்துள்ளது. இந்தியாவில் புதிதாகப் பிறந்த 100 குழந்தைகளில் ஒருவரைப் பிறவி இதய நோய் தாக்குகிறது. மேலும் இந்தியப் பெண்களிடையே ஏற்படும் புற்றுநோய்களில் 25%-க்கும் மேலானது மார்பகப் புற்றுநோயாக இருக்கிறது. ஆரம்பகால நோயறிதலை மேம்படுத்துதல், உயிர்வாழும் விகிதங்களை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவின் வளர்ந்து வரும் புற்றுநோய்ச் சுமையைக் குறைத்தல் ஆகியவற்றை இந்த புதிய முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

இந்திய போக்குவரத்துச் செலவை குறைக்கும் ரூ. 6,798 கோடி திட்டத்திற்கு அங்கீகாரம்

Next Post

டக் அவுட்டான ரோகித் சர்மா, 2வது டெஸ்டின் முதல் நாள் முடிவில் இந்தியா 243 ரன்கள் பின்னிலை

Next Post
டக் அவுட்டான ரோகித் சர்மா, 2வது டெஸ்டின் முதல் நாள் முடிவில் இந்தியா 243 ரன்கள் பின்னிலை

டக் அவுட்டான ரோகித் சர்மா, 2வது டெஸ்டின் முதல் நாள் முடிவில் இந்தியா 243 ரன்கள் பின்னிலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin