தீபாவளி மற்றும் பாய் தூஜ் போன்ற கொண்டாட்டங்களுடன் பண்டிகை சீசன் நாட்டில் களைகட்டியுள்ளதால் வீடு வாங்க திட்டமிட்டுள்ளவர்களை இலக்காகக் கொண்டு கடன்களில் கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் சிறப்பு தள்ளுபடிகளை அரசு வங்கிகள் வெளியிட்டு உள்ளன.
இந்த பண்டிகை சீசனில் நீங்கள் வீடு, கார் வாங்க விரும்பினாலும் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட்களில் (FD) முதலீடு செய்ய விரும்பினாலும், தற்போது வழங்கப்பட்டு வரும் சலுகை வட்டி விகிதங்களைப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். சமீபத்திய வாரங்களில் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் பல வங்கிகள் குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் ப்ராசஸிங் கட்டணங்களில் தள்ளுபடி என பல சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
பேங்க் பஜாரின் கூற்றுப்படி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி போன்ற குறிப்பிடத்தக்க வங்கிகள் பல்வேறு கடன் மற்றும் FD திட்டங்களில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. முக்கிய வங்கிகள் வழங்கும் சலுகைகள்:
1. பேங்க் ஆஃப் பரோடா (BOB):
வீட்டுக் கடன்கள்:
இந்த வங்கியில் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 8.40% முதல் தொடங்குகின்றன, இந்த கடனுக்கு ப்ராசஸிங் கட்டணங்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட திருப்பிச் செலுத்தும் காலங்கள் (extended repayment tenures) இல்லை.
கார் கடன்கள்:
ப்ராசஸிங் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதோடு 8.95%-லிருந்து தொடங்குகின்றன.
பர்சனல் லோன்கள்:
இந்த கடனுக்கான வட்டி விகிதங்கள் 10.80% முதல் தொடங்குகின்றன. எனினும் பெண்களுக்கு சலுகை விகிதமாக 10.55%-க்கு கடன் வழங்கப்படுகிறது. 84 மாதங்கள் வரை ப்ராசஸிங் கட்டணம் மற்றும் ரீபேமென்ட் ஆப்ஷன்கள் இல்லை.
ஃபிக்ஸட் டெபாசிட்:
இந்த வங்கி பொதுமக்களுக்கு 7.30% வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.80% மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.90% வட்டியையும் ‘Bob Utsav Deposit Scheme’-ன் கீழ் வழங்குகிறது.
இதையும் படிக்க:
இந்த தீபாவளியில் முதலீடு செய்ய ஏற்றது தங்கமா? வெள்ளியா? – யாருக்கு எது பெஸ்ட்?
2. பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா:
வீட்டுக் கடன்கள்:
ப்ராசஸிங் கட்டணங்கள் இல்லாமல் 8.35% முதல் தொடங்குகிறது.
கார் கடன்கள்:
இந்த வங்கியில் கார் கடன்ககளுக்கான வட்டி விகிதங்கள் 8.70% முதல் தொடங்குகின்றன, மேலும் ப்ராசஸிங் கட்டணங்கள் எதுவும் இல்லை.
3. எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்:
வீட்டுக் கடன்கள்:
ப்ராசஸிங் கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது
4. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா:
வீட்டுக் கடன்கள்:
ப்ராசஸிங் கட்டணம் தேவையில்லை.
பர்சனல் லோன்கள்:
ப்ராசஸிங் கட்டணம் தள்ளுபடி.
கார் கடன்கள்:
ப்ராசஸிங் கட்டணம் தள்ளுபடி. பல்வேறு கடன் திட்டங்களுக்கு சிறப்பு வட்டி விகிதங்கள் பொருந்தும்.
இதையும் படிக்க:
கடைகளில் ஸ்வீட்ஸ் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன? சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
5. இந்தியன் பேங்க்:
ஃபிக்ஸட் டெபாசிட்:
IND Super 300 Days திட்டத்தின் கீழ் 7.05% வட்டி வழங்கப்படுகிறது, அதே நேரம் IND Super 400 Days திட்டம் 7.30% வட்டியை வங்கி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 0.50% மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு 0.75% கூடுதல் வட்டி கிடைக்கும்.
6. பஞ்சாப் & சிந்து வங்கி:
வீட்டுக் கடன்கள்:
8.45% முதல் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் துவங்கும் நிலையில் ப்ராசஸிங் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
7. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா:
வீட்டுக் கடன்கள்:
இந்த வங்கியில் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 8.35%-லிருந்து தொடங்குகின்றன. எந்த ப்ராசஸிங் கட்டணமும் இல்லை.
இதையும் படிக்க:
“தங்கத்தின் விலை சவரனுக்கு விரைவில் ரூ.1 லட்சத்தை எட்டும்…” – நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் முன்வைக்கும் காரணம்!
8. ஹெச்டிஎஃப்சி பேங்க்:
கார் கடன்கள்:
கார் கடன்களுக்கான வட்டி விகிதம் Foreclosure கட்டணம் இல்லாமல் 9.25%-ல் தொடங்குகிறது.
ஃபிக்ஸட் டெபாசிட்:
2 ஆண்டுகள் மற்றும் 11 மாத கால மெச்சூரிட்டி பீரியட்டிற்கு 7.35% மற்றும் 4 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களுக்கு 7.40% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் கூடுதலாக 0.50% வட்டி பெறுவார்கள்.
.
&w=750&resize=750,375&ssl=1)
