சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை ஐ.பி.எல் 2025 யில் தக்கவைக்குமா என்ற கேள்விதான் தற்போதைய ஐ.பி.எல் வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 10 அணிகளும் வியாழக்கிழமை (நாளை) மாலை 5 மணிக்குள் retention பட்டியலை IPL ஆட்சிக் குழுவுக்கு அளிக்க வேண்டும். retain மற்றும் release செய்யப்படவுள்ள வீரர்கள் பட்டியலை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
2024 ஐ.பி.எல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது கடைசி லீக் போட்டியில், பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்ததால் வெளியேறியது. அந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தால், தோனிக்கு சென்னை சேப்பாக்கத்தில் பிரியாவிடை கிடைத்திருக்கும்.
இதையும் படிக்க:
மீண்டும் ஆர்சிபி அணியின் கேப்டனாகும் விராட் கோலி? வெளியானது புதிய தகவல்
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு, ஆட்சிக் குழு 2021இல் நீக்கப்பட்ட விதியை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஐந்து ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றிருந்தால், அந்த வீரர்கள் “uncapped” எனக் கருதப்படுவார்கள். இதனால் 2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனியை retention பட்டியலில் சேர்க்கும் வாய்ப்பு CSKக்கு உள்ளது. அந்தப் பட்டியலில் யாரெல்லாம் இருப்பார்கள் என்று ரசிகர்கள் கணித்து வருகிறார்கள்.
ருதுராஜ் கேய்க்வாட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டனாகவுள்ள ருதுராஜ், CSK நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெற்றவர். தோனி அவரிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்து வந்ததால், கேய்க்வாட் உறுதியாகத் தக்கவைக்கப்படுவார்.
சிவம் துபே: அணியின் மிகச்சிறந்த all-rounderஆகத் திகழும் ‘சிக்ஸர்’ துபே அணியின் மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் திறன் கொண்டவர். அணியின் கூடுதல் பந்துவீச்சாளராகவும் இவர் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் அவரும் தக்கவைப்பு பட்டியலில் ஷிவம் துபே நிச்சயம் இருப்பார்.
ரவீந்திர ஜடேஜா: தோனியைப் போலவே, CSK அணியைத் தவிர்த்து ஜடேஜாவை நினைத்துப் பார்க்கவே முடியாது. அணியில் அவரது பங்களிப்பும் தவிர்க்க முடியாதது. எனவே, அவரும் தக்கவைப்பு பட்டியலில் இடம்பெறுவது உறுதி.
மதீஷா பதீரானா: இலங்கை வேகப்பந்து வீச்சாளரான பதீரானாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வட்டாரத்தில் மிகுந்த மதிப்பிருக்கிறது. 2022ல் அணியில் சேர்ந்த பதீரானா CSKக்காக 34 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இளம் மலிங்கா என்றழைக்கப்படும் பதீரானாவை சி.எஸ்.கே நிச்சயம் தக்கவைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எம்.எஸ். தோனி (Uncapped): தோனி இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தோனி அணியில் விளையாடுவதாகத் தெரிவித்தால், நிச்சயம் அவரை வரவேற்பதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ள புதிய விதியும் தோனியின் வருகைக்குச் சாதகமாக இருப்பதால், அவரை சென்னை அணி நிச்சயம் அன்கேப்டு பிளேயராகத் தக்கவைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)