• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ROSÉ ராக்டு WORLD ஷாக்டு… உலகளவில் ட்ரெண்டிங் நம்பர் ஒன்; சாதனைகள் படைக்கும் 'ஆப்ட்' APT பாடல்!

GenevaTimes by GenevaTimes
October 30, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ROSÉ ராக்டு WORLD ஷாக்டு…  உலகளவில் ட்ரெண்டிங் நம்பர் ஒன்; சாதனைகள் படைக்கும் 'ஆப்ட்' APT பாடல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இசை கலைஞர்களின் பாடல்கள் வெளியாவதும் அதில் சிலவற்றை மக்கள் கொண்டாடுவதும் வழக்கம் தான். அப்படி அண்மையில் வெளியாகி உலகம் முழுவதையும் வைப் செய்ய வைத்துக் கொண்டிருக்கும் பாடல் தான் ‘ஆப்ட்’ (APT). அக்டோபர் 18, 2024 பிரேசில் பாடகர் புருனோ மார்ஸுடன் இணைந்து தனது சமீபத்திய பாடலான ‘ஆப்ட்’-ஐ வெளியிட்டார் பிளாக்பிங்கின் ரோஸே. இதன் மூலம் கே-பாப் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை அமைத்துள்ளார் ரோஸே.

வெளியான ஒரே வாரத்தில் 134 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. யூடியூபில் 2024 ஆம் ஆண்டில் அதி வேகமாக பார்வையாளர்கள் பெற்ற இசை வீடியோவாக ‘ஆப்ட்’ மாறிவிட்டது. இந்த சாதனையை கொண்டாடும் ரோஸே, தனது இன்ஸ்டாகிராமில், ‘அப்பதூ அப்பதூ(APT) … 100 மில்லியன் காட்சிகள்?’ என்ற தலைப்பில் ஒரு செல்ஃபி வெளியிட்டுள்ளார்.

இந்த பாடல் ஆப்பிள் மியூசிக் யு.எஸ் பாப் விளக்கப்படங்களில் 4 வது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது. இதற்கு முன் பி.டி.எஸ்-ன் ஜுங்கூக்கின் முந்தைய பதிவு இந்த சாதனை படைத்தது. ஆப்பிள் மியூசிக் யு.எஸ்-ஸில் முதல் 10 இடங்களைப் பிடித்த இரண்டாவது கே-பாப் கலைஞராகவும் ரோஸே தற்போது உயர்ந்திருக்கிறார்.

‘APT’ உலகளாவிய ஸ்பாட்டிஃபை தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது மற்றும் முதல் 24 மணி நேரத்தில் 25.24 மில்லியன் பார்வைகளுடன் யூடியூப் ரெக்கார்ட்ஸை உடைத்தது. இது 2024 ஆம் ஆண்டில் ஒரு கொரிய தனிப்பாடலுக்கு மிகப்பெரிய அறிமுகமாகும். இந்த பாடல் பல்வேறு தளங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

உலகளவில் மிகவும் செல்வாக்குமிக்க கே-பாப் தனி கலைஞர்களில் ஒருவராக ரோஸேவை (APT) பாடல் உறுதிப்படுத்தியுள்ளது. ரோஸே மற்றும் புருனோ மார்ஸின் ஆப்ட் பாடல், ஒரே நாளில் ஸ்பாட்டிஃபையில் 14.59 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இது ஜூலை 19 அன்று வெளியான ஒரு நாளில் 10.6 மில்லியன் ஸ்ட்ரீம்கள் பெற்ற பி.டி.எஸ் ஜிமினின் சாதனையை முறியடித்துள்ளது.

இதற்கிடையில், இப்போதைக்கு, ‘ஆப்ட்'(APT) ஸ்பாட்டிஃபையில் 100 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது. கூடுதலாக, இந்த பாடல் உலகளாவிய ஸ்பாட்டிஃபை தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்ததுள்ளது, இதன் மூலம் இந்த சாதனையை படைத்த முதல் கே-பாப் பெண் ஆர்ட்டிஸ்ட் ஆகிறார் ரோஸே .

APT, தற்போது US iTunes இல் 63 நாடுகளில் நம்பர் 1 இடத்தைப் பெற்றுள்ளது. Global Spotify, MelOn மற்றும் Genie உட்பட 13 தளங்களில் இது நம்பர் 1 பாடலாக உருவெடுத்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, “APT” தொடர்ந்து நான்கு நாட்களாக Global Spotify இல் நம்பர் 1 இல் உள்ளது . இது 2 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களுடன் தொடர்ந்து நான்காவது நாளாக US Spotify இல் முதலிடத்தில் உள்ளது.

BLACKPINK: `BTS மட்டுமல்ல… இவர்களும் கொரியாவின் அடையாளம்தான்’ – பிளாக்பிங்க் பெண்கள் குழுவின் கதை

Read More

Previous Post

சீனாவுக்கு லட்சக்கணக்கில் கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

Next Post

‘கச்சாங் பூத்தே’ என்றால் மகாதீருக்கு இளக்காரமா? – Malaysiakini

Next Post
‘கச்சாங் பூத்தே’ என்றால் மகாதீருக்கு இளக்காரமா? – Malaysiakini

‘கச்சாங் பூத்தே’ என்றால் மகாதீருக்கு இளக்காரமா? – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin