அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் பொறுப்பேற்பார் என்று இணையத்தில் தகவல்கள் பரவி உள்ளன.
இது தொடர்பாக விராட் கோலியும், பெங்களூரு அணியின் நிர்வாக கமிட்டியும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன் முடிவில் விராட் கோலி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகாலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணிக்கு ஏற்பட்டுள்ள தேவையை கவனத்தில் கொண்டு விராட் கோலி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பெங்களூரு அணியின் கேப்டனாக கடந்த மூன்று ஆண்டுகளாக பாப் டூப்ளசிஸ் பொறுப்பிலிருந்து வருகிறார். 40 வயதாகும் அவர் ஆர்.சி.பி அணியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் சமீபத்தில் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் அவர் கேப்டனாக இருந்த செயின்ட் லூசியா கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. இதன் மூலம் டூப்ளசிஸ் தன்னை சிறந்த கேப்டனாக மீண்டும் நிரூபணம் செய்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி இதுவரை பட்டத்தை வெல்லாத நிலையில் அணி நிர்வாகம் எத்தகைய முடிவை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த அணியில் முக்கிய ஆட்டக்காரராக அணியின் வெற்றிக்கு விராட் கோலி பங்களித்தார் என்பது கவனிக்கத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
