• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Nepoleon: `உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது; யார் மனதையும்…' – நடிகர் நெப்போலியன் உருக்கம்

GenevaTimes by GenevaTimes
October 2, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Nepoleon: `உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது; யார் மனதையும்…' – நடிகர் நெப்போலியன் உருக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கிவந்த நடிகர் நெப்போலியன், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகன் தனுஷ், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டுவருகிறார். இந்த நிலையில், தனுஷுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார். சமீபத்தில் தனுஷுக்கு பிரமாண்டமாக நிச்சயதார்த்தமும் நடந்தது. அப்போதே, `தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு திருமணமா…?’ என்கிற ரீதியில் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

நடிகர் நெப்போலியன் குடும்பத்துடன்

தற்போது ஜப்பானில் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது. தனுஷால் விமானத்தில் ஏறமுடியாது என்பதால், கப்பலில் ஜப்பான் சென்றிருக்கிறார்கள். அது தொடர்பான வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நெப்போலியன், “அன்பு நண்பர்களே, உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்களே, எங்கள் முத்த மகன் தனுஷின் 8 ஆண்டுக்கால கனவு..! இந்தியாவில் பிறந்தாலும், சூழ்நிலை காரணமாக உலகின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் நாங்கள், மறு கோடியில் இருக்கும் ஜப்பானுக்கு பயணம் செய்ய ஓர் ஆண்டு திட்டமிட்டு , 6 மாத காலமாக செயல்வடிவம் கொடுத்து, ஒரு மாதகாலமாக பயணம் செய்து, உங்கள் அனைவரது வாழ்த்துகளாலும் ஆசீர்வாதத்தாலும்,
தனுஷின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறோம்…!

எல்லையில்லா மகிழ்ச்சி அவனுக்கு…! அளவில்லா மனநிறைவு எங்களுக்கு..! சாதித்துவிட்டான். இந்த தருணத்தில் ஒருசில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..! அதுபோல எங்கள் வாழ்க்கையை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளாகவும் வைக்கிறேன்..! நம் பெற்றோரின் கனவுகளுக்காகவும், நமது கனவுகளுக்காகவும், நம் பிள்ளைகளின் கனவுகளுக்காகவும் அவசியம் வாழ வேண்டும்..! வாழ்ந்து பார்க்க வேண்டும்..! கடமையை நிறைவேற்ற வேண்டும்..! வாழ்க்கை ஒருமுறைதான்..! வாழ்ந்துதான் பார்போமே..!

நடிகர் நெப்போலியன்

“அரிது அரிது மானிடராய்ப்
பிறப்பது அரிது..! “

இந்த உலகிற்கு நாம் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை..! அதுபோல் நாம் இந்த உலகைவிட்டு போகும் போதும் எதையும் கொண்டு போகப்போவதில்லை..!

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”
“தீதும் நன்றும் பிறர்தர வாரா”

“அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்..!”

அவரவர் வாழ்க்கையை அவர்களது மனம்போல் நன்றாக வாழுங்கள்..! மற்றவரையும் அவர்களது
மனம்போல வாழ விடுங்கள்..! யார் மனதையும் புண்படுத்தாதீர்கள், குறை கூறாதீர்கள், பழிக்காதீர்கள், உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில், யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள்..! உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை மறவாதீர்கள்..!

“ஒரு பக்க சொல் ஓர் யானை பலம்”

நடிகர் நெப்போலியன் குடும்பத்துடன்

எல்லோரையும் வாழ்த்துங்கள்..! பிடிக்கவில்லை என்றால் இழிவாக பேசாதீர்கள்..! அது உங்களுக்கே ஒருநாள் திரும்பவிடும்..! எண்ணம் போல்தான் வாழ்க்கை..! நன்றாக எண்ணுங்கள்..! சிந்தனையை செயல்படுத்துங்கள்..! உலகை நீங்களும் வெல்லலாம்..! முயன்றால் முடியாதது என்று
எதுவுமே இல்லை..! வாழுங்கள்! வாழவிடுங்கள்..!
நான் போடுகின்ற ஒவ்வொரு பதிவும், எனது திரையுலகின் நடிப்பையும் நிஜ உலகின் வாழ்க்கையையும் பார்த்து ரசிப்பவர்களுக்கும், எங்களை நேசிப்பவர்களுக்கும், எங்களிடம் அன்பை சுவாசிப்பவர்களுக்கும் மட்டும்தான்..! அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் பல..!” எனப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Sk Productions: “பெயரை தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக…” – எஸ்கே புரொடக்ஷன்ஸ் எச்சரிக்கை!

Read More

Previous Post

ஈரான் ஏன் உள்ளே வந்தது? இஸ்ரேல் மீது ஏவுகணைகள் ஏவியது ஏன்?

Next Post

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா நேரடி மோதல்: லெபனானில் தரைவழித் தாக்குதலால் போர் பதற்றம் தீவிரம் | Israel and Hezbollah fighting on the ground in Lebanon 

Next Post
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா நேரடி மோதல்: லெபனானில் தரைவழித் தாக்குதலால் போர் பதற்றம் தீவிரம் | Israel and Hezbollah fighting on the ground in Lebanon 

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா நேரடி மோதல்: லெபனானில் தரைவழித் தாக்குதலால் போர் பதற்றம் தீவிரம் | Israel and Hezbollah fighting on the ground in Lebanon 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin