• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இலங்கை அதிபரானார் அநுரா குமார திசாநாயக்க: இன்று பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு | Sri Lanka elections result highlights and Anura Kumara Dissanayake elected President

GenevaTimes by GenevaTimes
September 25, 2024
in உலகம்
Reading Time: 9 mins read
0
இலங்கை அதிபரானார் அநுரா குமார திசாநாயக்க: இன்று பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு | Sri Lanka elections result highlights and Anura Kumara Dissanayake elected President
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) முன்னணி சார்பில் போட்டியிட்ட அநுரா குமார திசாநாயக்க (56) வெற்றி பெற்றார். இலங்கையின் 9-வது அதிபராக இன்று பதவியேற்க உள்ளார்.

இலங்கை அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில், 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய சக்தி முன்னணியின் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள்சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க, பொதுஜன பெரமுன கட்சியின் நமல் ராஜபக்ச ஆகியோர்தான் முக்கிய வேட்பாளர்களாக இருந்தனர்.

சனிக்கிழமை மாலையே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் சஜித் பிரேமதாசவுக்கும், அநுராவுக்கும் இடையேதான் கடுமையான போட்டி காணப்பட்டது. இருப்பினும், 50 சதவீத வாக்குகளை யாரும் பெற முடியவில்லை. முதலில் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அநுர 42 சதவீத வாக்குகளை யும், சஜித் பிரேமதாசா 32 சதவீத வாக்குகளையும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய அதிபர் ரணில் முதல் இரண்டு இடங்களுக்குள் வரத்தவறியதால் முதல் சுற்றிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

முதல் கட்டத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெறாத காரணத்தால், 2-வது விருப்ப வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 2 மற்றும் 3-வது விருப்ப சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதும் அநுர முதலிடத்தில் இருந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கையின் 9-வது அதிபராக மார்க்சிஸ்ட் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று பதவியேற்க உள்ளார்.

அநுர கூறுகையில், “பல நூற்றாண்டு நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகியுள்ளது. இந்த சாதனை எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. உங்களின் கூட்டு முயற்சியின் மூலமே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. உங்களின் அர்ப்பணிப்பு நம்மை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாக இருக்கும். புதிய மறுமலர்ச்சி இலங்கையை படைப்போம்” என்றார்.



Read More

Previous Post

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு: பிரதமர் மோடியிடம் ஜோ பைடன் உறுதி | US backs India bid for permanent seat in UN Security Council

Next Post

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்… ஹெஸ்பொல்லா அமைப்பின் படைத்தளபதி உயிரிழப்பு!

Next Post
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்… ஹெஸ்பொல்லா அமைப்பின் படைத்தளபதி உயிரிழப்பு!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்... ஹெஸ்பொல்லா அமைப்பின் படைத்தளபதி உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin