• Login
Sunday, June 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்: அதிபர் முன்னிலையில் பதவியேற்றார் | Harini Amarasuriya sworn in as new Sri Lanka Prime Minister

GenevaTimes by GenevaTimes
September 25, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்: அதிபர் முன்னிலையில் பதவியேற்றார் | Harini Amarasuriya sworn in as new Sri Lanka Prime Minister
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராமேசுவரம்: இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, நாட்டின் 9-வது அதிபராக கடந்த 23-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், புதிய அரசு அமைவதற்கு ஏற்ப, பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது தலைமையிலான அமைச் சரவையும் பதவி விலகியது. இதைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரிய (54), இடைக்கால பிரதமராக நியமிக்கப்படுவதாக அதிபர் அநுர குமார திசாநாயக்க அறிவித்தார். அதிபர் முன்னிலையில் ஹரிணி அமரசூரிய நேற்று பதவியேற்றார்.

இலங்கையின் 16-வது பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஹரிணி அமரசூரியவுக்கு நீதி, கல்வி, தொழிலாளர், தொழில், சுகாதாரம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், அதிபர் அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் ஆகிய 3 பேர் அடங்கிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.

சிரிமாவோ பண்டார நாயக்க கடந்த 1960-ல் இலங்கை பிரதமரானார். இலங்கையின் முதல் பெண் பிரதமர் என்பது மட்டுமின்றி, உலகின் முதல் பெண் பிரதமரான பெருமையும் அவருக்கு உண்டு. அவரைத் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு அவரது மகள் சந்திரிகா குமாரதுங்க சிறிது காலம் பிரதமர் பதவியில் இருந்தார். பின்னர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். சந்திரிகா குமாரதுங்க அதிபர் ஆனதை தொடர்ந்து, அவரது தாய் சிரிமாவோ பண்டாரநாயகே 1994 முதல் 2000-ம் ஆண்டு வரை பிரதமர் பதவியில் இருந்தார். 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு பெண், பிரதமராக பதவியேற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் மூத்த தலைவரான ஹரிணி அமரசூரிய, கல்வியாளர், மனித உரிமை ஆர்வலரும்கூட. கடந்த 2019 அதிபர் தேர்தல், 2020 நாடாளுமன்ற தேர்தல், தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தல் ஆகியவற்றில் அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ஹரிணி அமரசூரியவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்று அப்போதே கூறப்பட்டது குறிப்பிடத் தக்கது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முடியாதபடி கொழும்பு, யாழ்ப்பாணம் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



Read More

Previous Post

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி மீண்டும் சந்திப்பு: விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என நம்பிக்கை | PM Meets Zelensky In New York, Reaffirms Support For Peaceful Resolution

Next Post

தேசங்களை இணைக்கும் பிணைப்பை கொண்டாடுவோம் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் பற்றி பிரதமர் பெருமிதம் | India Land Of Opportunities: PM Modi At Diaspora Event

Next Post
தேசங்களை இணைக்கும் பிணைப்பை கொண்டாடுவோம் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் பற்றி பிரதமர் பெருமிதம் | India Land Of Opportunities: PM Modi At Diaspora Event

தேசங்களை இணைக்கும் பிணைப்பை கொண்டாடுவோம் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் பற்றி பிரதமர் பெருமிதம் | India Land Of Opportunities: PM Modi At Diaspora Event

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin