இலங்கையின் 9ஆவது அதிபராக அனுர குமார திசநாயக்க இன்று காலை 9 மணிக்கு பதவியேற்கிறார்.
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றில் யாருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்காத நிலையில், முதல் முறையாக இரண்டாம் விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதியில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசநாயக்க, 55 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
44 விழுக்காடு வாக்குகளுடன் சஜித் பிரேமதாச இரண்டாம் இடம் பிடித்தார். மூன்றாவது இடத்தை ரணில் விக்ரமசிங்க, நான்காவது இடத்தை நமல் ராஜபக்சவும், 5வது இடத்தை தமிழர்களின் பொது வேட்பாளரான அரியநேந்திரன் பாக்கியசெல்வமும் பிடித்தனர்.
கொழும்பில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் எளிமையான விழாவில், அனுர குமார திசநாயக்க பதவியேற்கிறார்.
Also Read |
‘புதிய மறுமலர்ச்சியை தொடங்குவோம்’ – இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அனுரகுமார திசாநாயகே அழைப்பு
இதனிடையே, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திசநாயக்கவை நேரில் சந்தித்த இந்திய தூதர் சந்தோஷ் ஷா வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக, இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக்க இன்று பதவியேற்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
