இலங்கை அதிபர் தேர்தல் நடந்து முடிந்து பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு, அந்நாட்டின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் 50% வாக்குகள் கிடைக்காததால், இலங்கை வரலாற்றிலேயே முதல்முறையாக இரண்டாம் விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இது ஒருபுறம் கவனம் பெற்றிருக்கும் சமயத்தில், இலங்கை அதிபர் ரேஸில் இருந்த ரணில் விக்ரமசிங்க, 17 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இந்தத் தேர்தலோடு அவரின் கடந்த கால தேர்தல்கள் குறித்தும் பார்ப்போம்.
இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க, 1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு துறைகளின் அமைச்சராகவும், பிரதமராகவும், அதிபராகவும் ரணில் விக்ரமசிங்க பதவி வகித்துள்ளார்.
இதையும் படியுங்கள் :
‘புதிய மறுமலர்ச்சியை தொடங்குவோம்’ – இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அனுரகுமார திசாநாயகே அழைப்பு
பலமுறை இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, நடப்பாண்டு தேர்தலுடன் சேர்த்து இதுவரை 3 முறை அதிபர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். 1999, 2005, 2024 ஆகிய 3 ஆண்டுகளில் போட்டியிட்ட அவர், 3 தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்கள் வெடித்த போது, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்ரமசிங்க அதிபராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
