• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இலங்கை அதிபர் தேர்தல் : 4 முனைப் போட்டியில் வெற்றிவாய்ப்பு யாருக்கு அதிகம்?

GenevaTimes by GenevaTimes
September 19, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
இலங்கை அதிபர் தேர்தல் : 4 முனைப் போட்டியில் வெற்றிவாய்ப்பு யாருக்கு அதிகம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் 4 முனைப் போட்டி காணப்படுகிறது. எந்த வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

இலங்கை என்பது இந்தியப் பெருங்கடலில் ஒரு கண்ணீர் துளி வடிவ தீவு நாடாகும். 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்தது. அன்று முதல் அங்கு நடைபெற்ற உள்நாட்டு போரில், ஒரு இலட்சம் உயிர்களைப் பலிகொடுத்துள்ளது.

விளம்பரம்

2004 இல் சுனாமியால் மேலும் 25,000 உயிர்கள் பலியாகியது. பெரும் இயற்கை வளங்களும், நிகரற்ற அழகும் கொண்ட சபிக்கப்பட்ட தேசம் என்று இலங்கையை சர்வதேச பார்வையாளர்கள் விமர்சிக்கின்றனர்.

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக சனிக்கிழமை (செப்டம்பர் 21) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் மக்கள் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் இடம்பெறும் முதலாவது தேர்தல் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

விளம்பரம்

முந்தைய அதிபர் தேர்தல்களைப் போலல்லாமல், தற்போதைய தேர்தல் மிகவும் சிக்கலானது. நான்கு முனை போட்டி இந்த தேர்தலில் காணப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராகவும், ஏகேடி என அழைக்கப்படும் மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சமகி ஜன பலவேகய (எஸ்ஜேபி) கட்சியின் நமல் ராஜபக்ச ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பரந்து கிடக்கும் ஊழல், சர்வதேச உறவுமுறை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வர்க்க முரண்பாடுகளை நீக்குவேன் என்று, ஜேவிபி வேட்பாளர் அநுர குமர திஸாநாயக உறுதி அளித்துள்ளார். தான் இலங்கையின் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்க இன்னும் ஒரு வாரமே உள்ளதாக அவர் கூறுகிறார். அவரது பொதுக்கூட்டம் நாடு முழுவதும் பெரும் கூட்டத்தை ஈர்க்கிறது.

விளம்பரம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் SLPP மற்றும் SJB ஆகிய இரண்டு கட்சிகள் ஆதிக்கம் செலுத்திய நாட்டில் அண்மைக்காலம் வரை ஜேவிபி ஒரு விளிம்பு நிலை அரசியல் சக்தியாக இருந்தது. ஜே.வி.பி ஒரு காலத்தில் இரண்டு கெரில்லா கிளர்ச்சிகளுக்காக தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக இருந்தபோது, ​​அதிகாரத்தை அடைவதற்கு ஜனநாயக வழிமுறைகளை கடைபிடிக்க தொடங்கியது.

இம்முறை பெரும்பான்மையான வாக்காளர்கள் முக்கியமாக ஏழைகள் மற்றும் தொழிலாளர் வர்க்கம் அனுராவை ஆதரிப்பதாகத் தெரிகிறது. சுதந்திரம் பெற்றதில் இருந்து தேசத்தை ஆட்டிப்படைத்துள்ள சீரழிந்த அமைப்புமுறையை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

விளம்பரம்

இலங்கையை மற்றொரு ஸ்வீடனாக, செல்வச் செழிப்பான நலன்புரி நாடாக மாற்றுவதாக அநுரா உறுதியளிக்கிறார். ஆனால் அடிப்படை உண்மைகள் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையைப் பற்றி பேசுகின்றன. அனுரா வெற்றி பெற்றதாக அவரது தோழர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

அவரது பிரதான போட்டியாளரான சஜித் பிரேமதாசா கடந்த தேர்தல்களில் SJB பெற்ற வாக்குப் பங்கையும், நாடு முழுவதும் பரவியிருக்கும் கட்சித் தொண்டர்களையும் கணக்கில் கொண்டுள்ளார்.

இந்த தேர்தலில் சஜித் வெற்றி பெறுவார் என்று அவரது பிரச்சார மேலாளர்கள் உற்சாகமாக உள்ளனர். அவர்கள் அனுரவை வெறும் ஊடகம் மற்றும் சமூக ஊடக விளம்பரம் என்று ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.

விளம்பரம்

அநுரா மற்றும் சஜித்தை போல், ரணிலுக்கு களத்தில் நிறுவப்பட்ட பிரசாரகர்கள் இல்லை. மகிந்த ராஜபக்சவின் SLPP யில் இருந்து தனது பக்கம் விலகிய 60 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் தனக்கு முழு ஆதரவாக இருப்பார்கள் என்று ரனில் விக்ரமசிங்கே நம்புகிறார்.

இதையும் படிங்க – என் மீதான கொலை முயற்சிக்கு பைடன், கமலா ஹாரிஸ் தான் காரணம் – டொனால்டு டிரம்ப்

ரணில் தனது தோல்வி பொருளாதார மீட்சியை சீர்குலைத்துவிடும் என்றும், மோசமான நிலையை இலங்கை சந்திக்கும் என்றும் மக்களுக்கு எச்சரித்து வருகிறார்.

விளம்பரம்

இலங்கையில் 25% தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். சஜித் மற்றும் ரணில் இருவரும் இந்த வாக்குகளை உற்று நோக்குகின்றனர். அவர்களில் பெரும்பாலோரை கார்னர் செய்ய ரணிலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. சிறுபான்மை வாக்குகள் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் சென்றால் அநுரவின் இலங்கை அதிபர் கனவை முடிவுக்கு கொண்டு வரலாம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நான்காவது வேட்பாளர் நாமல் ராஜபக்ச வெற்றி பெறுவதற்கான அழுத்தத்தில் இல்லை. 38 வயதாகும் அவர், கட்சியைக் காப்பாற்றவும், அடுத்த மூன்று மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகவும் போட்டியிடுகிறார்.

பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பான சூழலில் இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் சனிக்கிழமை செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

.

Read More

Previous Post

“ஆபீஸ் காஃபி பிரேக்கில் செக்ஸ் வச்சிக்கோங்க” – ரஷ்யா புதிய முயற்சி

Next Post

காசா – ஹமாஸ் தீவிரவாதிகளையடுத்து ஹிஸ்புல்லா மீது கவனம் செலுத்தும் இஸ்ரேல் | Israel focused on Hezbollah

Next Post
காசா – ஹமாஸ் தீவிரவாதிகளையடுத்து ஹிஸ்புல்லா மீது கவனம் செலுத்தும் இஸ்ரேல் | Israel focused on Hezbollah

காசா - ஹமாஸ் தீவிரவாதிகளையடுத்து ஹிஸ்புல்லா மீது கவனம் செலுத்தும் இஸ்ரேல் | Israel focused on Hezbollah

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin