தன் மீதான கொலை முயற்சிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரின் பேச்சுக்களே காரணம் என குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில், நேற்று ட்ரம்ப்பை குறிவைத்து இரண்டாவது முறையாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், நாட்டை காக்க போகும் தன் மீது இவர்களது பேச்சு தன்னை சுடுவதற்கு காரணமாக அமைந்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார். பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் உள்ளேயும் வெளியேயும் நாட்டை அழித்து வருவதாகவும் விமர்சித்தார்.
இதையும் படிக்க:
ஒரு நாளுக்கு 100 போன் கால்.. யார் என்ற விசாரணையில் மனைவிக்கு தெரிந்த பேரதிர்ச்சி
அவர்கள் கூறியதை போல், தான் நாட்டிற்கு அச்சுறுத்தல் அல்ல என்றும்பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர்தான் நாட்டிற்கு உண்மையான அச்சுறுத்தல் எனவும் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)