• Login
Thursday, August 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

எகிப்து நாட்டில் இரு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

GenevaTimes by GenevaTimes
September 15, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
எகிப்து நாட்டில் இரு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எகிப்த் நாட்டில், கெய்ரோவின் வடகிழக்கில் உள்ள சகாசிக் பகுதியில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இதுவரை இரு குழந்தைகள் உட்பட மூவர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த விபத்தில் 49 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்த நாடின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எகிப்த்தின் சகாசிக் பகுதியில் இருந்து இஸ்லாமியா நோக்கி ஒரு ரயில் புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, மன்சூரா பகுதியில் இருந்து சகாசிக் நோக்கி ஒரு ரயில் வந்துள்ளது. இந்த இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் ஒரு ரயிலின் ஒரு பெட்டி முழுவதுமாக ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கீழே விழுந்துள்ளது.

விளம்பரம்

இந்த விபத்து குறித்து அறிந்தவுடன், அந்தப் பகுதியில் இருந்த மக்கள் ஓடிவந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், மீட்பு படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

நடிகை நிமிஷா சஜயனின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்!


நடிகை நிமிஷா சஜயனின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்!

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மீட்பு படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவருகின்றனர். இந்த விபத்தில் தற்போதுவரை இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் இறந்துள்ளதாகவும், மேலும், 49 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தெரிவித்துள்ள அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம், விபத்து பகுதிக்கு அவசர ஊர்த்திகளும் மருத்துவக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்துவருகின்றன எனத் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
இட்லி சாப்பிடும் போட்டியில் பங்கேற்ற வார்டு உறுப்பினர் பரிதாப பலி! சோகமாக மாறிய ஓணம் கொண்டாட்டம்

எகிப்தில் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக பிரச்னைகள் காரணமாக அங்கு அடிக்கடி ரயில் விபத்துக்கள் நடந்துவருகின்றன. குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு மட்டும் எகிப்த்தில் மொத்தம் 2,044 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இது அந்த நாட்டில் ஒரே ஆண்டில் நடந்த அதிகப்டச ரயில்விபத்துகள்.

அதேபோல், கடந்த 2021ம் ஆண்டு நடந்த இரு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் வரை பலியாகினர். 165 நபர்கள் காயடமடைந்தனர். அந்த நாட்டில் நடந்த கொடூர விபத்துகளில் 2012ம் ஆண்டு நடந்த விபத்தையும், 2002ம் ஆண்டு நடந்த விபத்தையும் குறிப்பிடலாம். இந்த இரு விபத்துகளில் 2012ல் நடந்த விபத்தில் ஒரு பள்ளி பேருந்து மீது ரயில் மோதி, அதில் 44 குழந்தைகள் பலியானர். அதேபோல், 2002ல் நடந்த பயணிகள் ரயில் விபத்தில் 360க்கும் மேற்பட்டோர் பலியானர்.

விளம்பரம்

.

Read More

Previous Post

பூமிக்கு கிடைக்கப்போகும் புதிய நிலா.. ஆனால் 2 மாதத்துக்குதான்

Next Post

பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் சுற்றுலா விண்கலம்! | SpaceX polaris dawn back to Earth

Next Post
பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் சுற்றுலா விண்கலம்! | SpaceX polaris dawn back to Earth

பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் சுற்றுலா விண்கலம்! | SpaceX polaris dawn back to Earth

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin