• Login
Saturday, August 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சிகாகோவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அமெரிக்க தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகள் | Representatives of American Tamil Associations met Chief Minister Stalin in Chicago

GenevaTimes by GenevaTimes
September 9, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
சிகாகோவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அமெரிக்க தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகள் | Representatives of American Tamil Associations met Chief Minister Stalin in Chicago
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிகாகோ (அமெரிக்கா): தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை சிகாகோவில், அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை 8.9.2024 அன்று சிகாகோவில், அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க நாட்டில் மேற்கொண்டுள்ள அரசு முறை பயணம் வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில், அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்துள்ளதோடு, 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் முனைப்போடு எடுத்து வருகிறது.

அந்த வகையில், வளர்ச்சியின் அடையாளமாக திகழும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் அதிக அளவில் தொடங்கிட முதலீடுகளை ஈர்த்திடும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் மு.க. ஸ்டாலின் அமெரிக்க நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பயணத்தின் போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும், இப்பயணத்தில் முதல்வர், அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து, அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் சார்பில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தமிழ் சொந்தங்களோடு கலந்துரையாடினார்.

அதன் தொடர்ச்சியாக, 8.9.2024 அன்று சிகாகோவில், முதல்வர் ஸ்டாலினை, தமிழ்நாடு அறக்கட்டளை, வட அமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு – FeTNA, சிகாகோ தமிழ்ச் சங்கம், அறம் சிகாகோ, லேக் கவுண்டியில் உள்ள தமிழர்கள் சங்கம், அகரம் தமிழ் அகாடமி, அன்னை தமிழ் அகாடமி, செயின்ட் லூயிஸ் தமிழ் சங்கம், இந்தியா தமிழ்ச் சங்கம், கிரேட்டர் மில்வாக்கி தமிழ்ச் சங்கம், மெக்லீன் மாவட்ட தமிழ்ச் சங்கம், மிச்சிகன் தமிழ்ச் சங்கம், அயோவா தமிழ்ச் சங்கம், வடகிழக்கு விஸ்கான்சின் தமிழ்ச் சங்கம், விஸ்கான்சின் தமிழ்ச் சங்கம், மினசோட்டா தமிழ்ச் சங்கம், டென்னசி தமிழ்ச் சங்கம், கென்டக்கி தமிழ்ச் சங்கம், அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்கம் (ATEA), உலகளாவிய எங்கள் குழுக்கள் சங்கம், தமிழ் தொழில்நுட்ப தொழில்முனைவோர் கவுன்சில் (TTEC), எழுச்சி அமெரிக்கா சங்கம், கொலம்பஸ் தமிழ்ச் சங்கம், கன்சாஸ் தமிழ்ச் சங்கம், வடகிழக்கு ஓஹியோ தமிழ்ச் சங்கம், பியோரியா தமிழ்ச் சங்கம், டேட்டன் தமிழ்ச் சங்கம், அமெரிக்க தமிழ் மருத்துவ சங்கம் (ATMA), அமெரிக்க தமிழ்ப் பள்ளிகள் சங்கம், கிரேட்டர் சின்சினாட்டி தமிழ்ச் சங்கம் (GCTS), குவாட் சிட்டி தமிழ்ச் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வரின் பயணம் வெற்றி பெறவும், அதிக அளவிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திடவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின், உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும், ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்குக் குடும்பத்துடன் வாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். தங்களைச் சந்தித்ததில் அளவில்லா மகிழ்ச்சியடைந்ததாகவும், அமெரிக்க வாழ் தமிழர்களின் நல்வாழ்வு சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அயலகத் தமிழர் நலவாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் உடனிருந்தனர்.



Read More

Previous Post

47 நாளுக்கு பிறகு இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் வழி வர்த்தகம் மீண்டும் தொடக்கம்: 40,000 டன் சரக்கு ஏற்றுமதி | Indo-Bangla trade resumes via rail route, 40K tonnes freight exported

Next Post

வெளியில் செல்லும் போது பாதுகாப்புக்காக மகள் தலையில் சிசிடிவி கேமரா: பாகிஸ்தான் தந்தையின் விநோத செயல் | Pakistan Man mounts CCTV on daughter head

Next Post
வெளியில் செல்லும் போது பாதுகாப்புக்காக மகள் தலையில் சிசிடிவி கேமரா: பாகிஸ்தான் தந்தையின் விநோத செயல் | Pakistan Man mounts CCTV on daughter head

வெளியில் செல்லும் போது பாதுகாப்புக்காக மகள் தலையில் சிசிடிவி கேமரா: பாகிஸ்தான் தந்தையின் விநோத செயல் | Pakistan Man mounts CCTV on daughter head

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin