அமைச்சர்களுடன் ஆன்மிகச் சொற்பொழிவாளர் நெருக்கமாக இருந்ததால்தான், அவருக்கு அரசுப் பள்ளிகளில் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது.
நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து சென்னையின் மத்திய பகுதியில் கார் பந்தயம் நடத்துவது அவசியம் தானா? அந்தப் பணத்தில் அம்மா உணவகத்தில் தரமான உணவை வழங்கலாம்” என்று பேசினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
“அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்ததால்தான், அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சையாக பேசியவருக்கு அனுமதி கிடைத்துள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டுபிடித்திருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சராக இருந்த நீங்கள் வி.ஐ.பி தானே? ஒரு வி.ஐ.பி-யை பார்க்க நிறைய பேர் வருவார்கள் என்பது அடிப்படை தியரி. பார்க்க வரும் அனைவரின் பின்புலத்தை விசாரித்த பின்னர்தான் அனுமதி அளிப்பார்களா? இதுகூட தெரியாத நீங்கள் எப்படி முதலமைச்சராக இருந்தீர்கள்? இப்போது எப்படி எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள்?

&w=1200&resize=1200,675&ssl=1)