• Login
Saturday, August 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை.. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு

GenevaTimes by GenevaTimes
September 5, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை.. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் கடும் மழை பெய்துள்ளது. இதில் அந்த நாட்டின் சில மாகணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சாகாங் மாகாணம் கடுமையான பாதிப்பை சந்தித்தாக சொல்லப்படுகிறது. கடும் மழையின் காரணமாக வடகொரியாவின் சாகாங் மாணத்தில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அதேபோல், நிலச்சரிவுகளும் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பேரிடரில் அந்த மாகாணத்தில் 4000 வீடுகள் பாதிக்கப்பட்டதாகவும், 15,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்ததாகவும் சொல்லப்படுகிறது. பல ஆயிரக் கணக்கானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. இந்த பேரிடரில் சிக்கியதில் 1000 நபர்கள் வரை உயிரிழந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

விளம்பரம்

வடகொரியாவில் கடுமையான கட்டுபாடுகள் உள்ள காரணத்தினால், அதன் அண்டை நாடான தென்கொரியாவில் இருந்து வரும் செய்திகளே இதனை தெரிவித்து வருகிறது. வெள்ளம் பாதிப்பு, மக்கள் அவதி, மரணங்கள் இவையெல்லாம் ஒருபுறம் இருக்கும்போது, மறுபுறம் வெள்ளத்தடுப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்றும் பல அரசு அதிகாரிகள் ஊழல் மற்றும் கடமைகளை முறையாக செய்யாததன் விளைவே இந்த உயிரிழப்புகளுக்கும் மக்கள் அவதிக்கும் காரணம். எனவே அந்த அரசு அதிகாரிகளுக்கு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மரண தண்டனை விதித்ததாகவும், அந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

விளம்பரம்

அதன்படி, கடமையை முறையாக செய்யவில்லை, ஊழல் குற்றச்சாட்டு என இந்த விவகாரத்தில் 20 முதல் 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்கள் உலகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், வடகொரியாவின் ‘வட கொரிய மத்திய செய்தி நிறுவனம்’ (KCNA) ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து அதிகாரிகளை கண்டிப்பாக தண்டிக்க அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

மேலும், கொரியா டைம்ஸ் எனும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பாக வடகொரியாவில் ஒரு வருடத்திற்கு 10 மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், ஆனால், கொரோனாவிற்கு பிறகு வருடத்திற்கு 100 மரண தண்டனைகள் விதிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

டிஜிட்டல் தொழில்நுட்பம், செமிகண்டக்டர் உள்பட இந்தியா – சிங்கப்பூர் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் | India, Singapore sign MoUs in fields of digital technology, semiconductor

Next Post

“ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும்” – புதின் | India, China, Brazil could act as mediators in Russia-Ukraine peace talks, says Vladimir Putin

Next Post
“ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும்” – புதின் | India, China, Brazil could act as mediators in Russia-Ukraine peace talks, says Vladimir Putin

“ரஷ்யா - உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும்” - புதின் | India, China, Brazil could act as mediators in Russia-Ukraine peace talks, says Vladimir Putin

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin