• Login
Monday, August 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அக்.7 தாக்குதலில் கடத்தப்பட்ட பிணைக்கைதியை காசா சுரங்கத்தில் இருந்து மீட்ட இஸ்ரேல்! | Israel rescues hostage from underground tunnel in Gaza 

GenevaTimes by GenevaTimes
August 28, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
அக்.7 தாக்குதலில் கடத்தப்பட்ட பிணைக்கைதியை காசா சுரங்கத்தில் இருந்து மீட்ட இஸ்ரேல்! | Israel rescues hostage from underground tunnel in Gaza 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெருசலேம்: இஸ்ரேல் காசா போருக்கு காரணமான அக்டோர் 7 தாக்குதலின்போது கடத்தப்பட்ட பிணைக்கைதி ஒருவரை காசாவின் நிலத்தடிச் சுரங்கத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது.

போர் தொடங்கி 10 மாதங்களுக்கு பின்பு ஒருவர் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், போர் நிறுத்தத்துக்காக சர்வதேச மத்தியஸ்தர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், இன்னும் 12-க்கும் மேற்பட்டோர் காசாவில் பிணைக் கைதியாக இருப்பது வலி மிகுந்த நினைவூட்டலாகவே இருக்கிறது.

பிணைக் கைதியின் விடுவிப்புக் குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், “தெற்கு காசா பகுதியில் நடந்த ஒரு கூட்டு நடவடிக்கையின் போது, அங்குள்ள நிலத்தடிச் சுரங்கத்தில் இருந்து கைத் ஃபர்கான் அல்காதி என்பவர் மீட்கப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின்போது யாராவது கொல்லப்பட்டார்களா அல்லது காயமடைந்தார்களா என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.

அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் இருந்த கடத்தப்பட்ட அரபு பெடோயின் சிறுபான்மையினர் 8 பேரில் அல்காதியும் ஒருவர். இவர், தாக்குதலுக்கு உள்ளான பல்வேறு விவசாய சமூகங்களில் ஒன்றான கிப்புட்ஸ் மாகானில் உள்ள பேக்கிங் நிறுவனத்தில் காவலராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள், 11 குழந்தைகள் உள்ளனர். காசாவிடமிருந்து உயிருடன் மீட்கப்பட்ட 8 பிணைக்கைதிகளில் 52 அல்காதியும் ஒருவர், அதேநேரத்தில் நிலத்தடி சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட முதல் நபர் இவர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

மீட்புக்கு பின்பு அல்காதியின் செயல்களை காட்டும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் அவர், சவரம் செய்யப்படாத முகத்துடன் ஒரு வெள்ளை அங்கி அணிந்திருக்கிறார். பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும்போது ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்களுடன் புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார்.

அல்காதியைப் பார்க்க அவரது பெரிய குடும்பத்தினர் மற்றும் அவர் வசிக்கும் ரஹாத் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் பலர் பீர்ஷேபா மருத்துவமனையில் திரண்டிருந்தனர். அப்போது அல்காதியின் சகோதரர் ஒருவர், அல்காதியின் கைக் குழந்தை ஒன்றை கைகளில் வைத்திருந்தார். அவர் பிணைக் கைதியாக இருக்கும்போது அந்தக்குழந்தை பிறந்தது.

அக்குழந்தை இன்னும் தனது தந்தையைப் பார்க்கவில்லை என்று அவரது தம்பி தெரிவித்தார். மற்றொரு குடும்ப உறுப்பினர் கூறும்போது, “நாங்கள் அனைவரும் அவரைக் காண, தழுவிக்கொள்ள, நாங்கள் அனைவரும் உனக்காக இங்கே உன்னுடன் இருக்கிறோம் என்றுச் சொல்ல ஆவலுடன் இருக்கிறோம்” என்றார்.



Read More

Previous Post

அமெரிக்க அதிபர் தேர்தல் | கமலா ஹாரிஸுடன் நேரடி விவாதம் – டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் | Donald Trump Agrees to Debate with Kamala Harris

Next Post

டெலிகிராம் CEO கைது எதிரொலி – பிரான்ஸ் நாட்டுடனான ரஃபேல் ஒப்பந்தத்தை முறித்தது ஐக்கிய அரபு அமீரகம்? – News18 தமிழ்

Next Post
டெலிகிராம் CEO கைது எதிரொலி – பிரான்ஸ் நாட்டுடனான ரஃபேல் ஒப்பந்தத்தை முறித்தது ஐக்கிய அரபு அமீரகம்? – News18 தமிழ்

டெலிகிராம் CEO கைது எதிரொலி - பிரான்ஸ் நாட்டுடனான ரஃபேல் ஒப்பந்தத்தை முறித்தது ஐக்கிய அரபு அமீரகம்? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin