உக்ரைன் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார். தலைநகர் கீவ்வில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, போரில் உயிர்நீத்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு 3 நாள் பயணமாக கடந்த புதன்கிழமை இந்தியாவில் இருந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, போலந்து அதிபருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கிருந்து, ரயில் மூலமாக 10 மணி நேரம் பயணம் செய்து உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார்.
1991-ஆம் ஆண்டு உக்ரைன் நாடு உருவான பிறகு, அங்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். அவரை உக்ரைன் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். ரயில் நிலையத்தில் காத்திருந்த உக்ரைன் வாழ் இந்தியர்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்ததுடன், பிரதமருடன் செல்பி எடுத்தும், கை குலுக்கியும் மகிழ்ந்தனர்.
இதையடுத்து, கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்த்தூவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதன் பிறகு, கீவ் நகரில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுக் கூடத்திற்குச் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் ஜெலென்ஸ்கி வரவேற்றார். ஜெலென்ஸ்கி ஆரத்தழுவி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 29-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலெர்ட்
பின்னர், போரில் உயிரிழந்த குழந்தைகள் மற்றும் வீரர்கள் குறித்த காணொலியை இருவரும் பார்த்தனர். மேலும் போரில் உயிர்நீத்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் போர் சம்பந்தமாக அதிபர் ஜெலன்ஸ்கீயுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன்படி ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
