அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தின் ஓக்லாண்ட் கவுன்ட்டியில் மருத்துவராகப் பணியாற்றி வந்தவர் ஏஜாஸ் (40). இந்திய குடிமகனான இவர், 2011-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர்மீது பாலியல் தொல்லை ரீதியான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையில், காவல்துறை விசாரணையை தொடங்கியது. அதில்தான் பல அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ஏஜாஸ், நீச்சல் குளத்தில் உடை மாற்றும் அறைகள், குளியலறைகள், மருத்துவமனை அறைகள், அலமாரிகள், படுக்கையறைகள், அவரால் இலகுவாக அணுகக்கூடிய குடியிருப்புகளுக்குள் உள்ள குளியலறைகள் ஆகிய பல்வேறு இடங்களில் ரகசிய கேமராக்களை பொருத்தியிருக்கிறார். அதன் மூலம் 2 வயது சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரின் நிர்வணப் புகைப்படங்களையும் சேகரித்திருக்கிறார்.

&w=1200&resize=1200,675&ssl=1)