தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பணத்தின் தேவை அதிகரித்துக் கொண்டிருக்க கூடிய நிலையில், அதிகமான லாபம் பெற எதில் முதலீடு செய்யலாம் என்ற கேள்விக்குறி எழுந்து வருகிறது. இந்நிலையில் SIPயில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற கருத்து இளைஞர்கள் மத்தியில்பிரபலம் அடைந்து வருகிறது. சிறிய தொகை முதலீடு செய்தாலே ஒரு நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும் என்று பல கருத்துக்கள் இளைஞர் மத்தியில் எழுந்து வந்த நிலையில், இந்த SIP ல் முதலீடு செய்வது நன்மையா? தீமையா? அதனுடைய சிறப்பு அம்சங்களை குறித்து மதுரையைச் சேர்ந்த அமெரிக்கன் கல்லூரி பொருளாதாரப் தலைவர் முத்துராஜ் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
SIP திட்டம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட திட்டம். இளைஞர்களின் மத்தியில் திட்டத்தை கொண்டு செல்லக்கூடிய வகையில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கின்றன.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்: ஒரு வங்கியில் நாம் வைத்திருக்கும் அக்கவுண்டில் மாதம் மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை இத்திட்டத்திற்கு பிடித்துக் கொள்ளலாம் என்று வங்கி மேலாண்மை அலுவலகம் சொல்லிவிட்டால் தானாகவே நீங்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்து விடலாம்.இத்திட்டம் ஒழுங்கு முறை கொண்ட திட்டமாக பார்க்கப்படும். ஏனென்றால் உங்கள் அனைவருக்கும் தெரியும் இந்தியா போன்ற நாடுகளில் சேமிப்பு என்பது இருக்கின்றது. ஆனால் அந்த சேமிப்பின் மூலமாக முதலீடு செய்வதற்கான உத்திகள் இல்லை. அப்படி சேமிப்பை முதலீடாக மாற்றுவதற்கான ஊத்தி தான் இந்த எஸ்ஐபி திட்டம்.
இதையும் வாசிக்க : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா ருத்ராபிஷேக விழா அறிவிப்பு
இளைஞர்கள் கந்துவட்டியில் இருந்து விடுபடுவதற்கு இது ஒரு நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும் ஏனென்றால் இப்போ உள்ள இளைஞர்கள் தொழிலுக்காகவோ அல்லது குடும்பத்திற்காகவோ கடன் பெறுவதும் தன்னிடம் உள்ள பணத்தை ஒழுங்கற்ற முறையில் முதலீடு செய்து அதனால் ஏற்படும் இழப்புகளை சரி செய்ய முடியாத சூழ்நிலை இருக்கின்றது. இதற்கு மாற்றாக தான் இந்த எஸ்ஐபி திட்டம் இருக்கின்றது.
SIP திட்டத்தின் நன்மைகள்:
1. மாதாமாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான முதலீடு திட்டமாக இருக்கின்றது.
2. வங்கி சார்ந்த நிறுவனங்கள் இருப்பதினால் நம்முடைய சேமிப்பிற்கு முழுக்க முழுக்க பாதுகாப்பு இருக்கின்றது.
3. எப்பொழுது வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இருந்து வெளியேறி கொள்ளலாம். உதாரணமாக, மூன்று ஆண்டுகளாக இந்த திட்டத்தில் இருக்கக்கூடிய நிலையில், திடீரென்று இரண்டு லட்சம் தேவைப்படுகின்றது என்றால் இத்திட்டத்தில் இருந்து வெளியேறி கொள்ளலாம் அல்லது இத்திட்டத்தில் பலன்பெறலாம்.
4. சீட்டு கட்டுவதில் இருப்பது போல் இல்லாமல் இத்திட்டத்தில் குறைந்தபட்ச வட்டி மற்றும் அதீத நம்பகத்தன்மை இருக்கின்றது.
இந்தியா என்பது அந்நிய முதலீட்டு நோக்கி இருக்கின்றது. இப்படி எஸ் ஐ பி மூலம் இளைஞர்களும் மற்றவர்களும் சேமிப்பு மற்றும் முதலீடு உருவாக்குவதன் மூலமாக நாட்டின் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கின்றது. மொத்தத்தில் இந்த எஸ் ஐ பி திட்டம் என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் நன்மை அளிக்கக்கூடிய திட்டம் மற்றும் வரவேற்கத்தக்கத் திட்டம் என தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
