அமெரிக்க அதிபராக தாம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் , டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்குக்கு கேபினட் அமைச்சர் பதவியோ அல்லது ஆலோசகர் பதவியோ வழங்கப்படும் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அமெரிக்க ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்
அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பரப்புரைகளை இரு கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளரான டிரம்பை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வெளிப்படையாக ஆதரித்து வருகிறார்.
இதையும் படிக்க:
இந்த நாட்டை விட்டு வெளியேறுவோருக்கு டிக்கெட்டுடன் உதவி தொகை வழங்கும் அரசு… எங்கு தெரியுமா?
டிரம்ப் பரப்புரைக்கு 375 கோடி ரூபாய் அளவுக்கு நிதி அளிக்க உள்ளதாக மஸ்க் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இந்த சூழலில் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்ட டிரம்ப், தாம் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், மஸ்குக்கு அமைச்சர் பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ அளிப்பேன் என்று அறிவித்துள்ளார். டிரம்ப் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் தாம் சேவை செய்யத் தயாராக இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)