தென் தமிழகப்பகுதியான தூத்துக்குடி மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் வாழை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் வாழைத்தார்கள் தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு ஏலத்திற்காகக் கொண்டுவரப்படுகிறது.
தினமும் காலை 9 மணி அளவில் மார்கெட்டில் ஏலம் தொடங்கப்படும் இந்த வாழைத்தார் ஏலத்தில் செவ்வாழை, நாட்டு வாழைப்பழம், கோழிக்கோடு, பச்சை பழம், பூலாஞ்செண்டு, கர்ப்பூரவல்லி உள்ளிட்ட பலவகையிலான வாழைத்தார்கள் இங்கே ஏலத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. வாழைத்தார் வரத்திற்கு ஏற்ப இங்கு வாழைத்தாரின் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
தூத்துக்குடி மார்க்கெட்டில் ஏலம் எடுக்கப்படும் வாழைத்தார்கள் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள கைகளில் விற்பனைக்கும், வெளி மாவட்டங்களில் விற்பனைக்கும் வாங்கிச் செல்லப்படுகின்றன.
இதையும் படிங்க: ஒரே புகைமூட்டமா இருக்கே… நீலகிரியில் பகலிலே ஹெட்லைட் போட்டுச் சென்ற வாகனங்கள்…
இது குறித்து வாழைத்தார் கமிஷன் மண்டி ராஜா கூறுகையில், “தூத்துக்குடி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து அழைத்தார்கள் இங்கே ஏலத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. பழைய காயல், புதுக்கோட்டை, ஏரல் போன்ற பல கிராமங்களிலிருந்து இங்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. மேலும் மலை வாழைப்பழம் தேனி, திண்டுக்கல்லிலிருந்து விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே வாழைப்பழங்களுக்கு தட்டுப்பாடாகவே இருக்கின்றன. குறிப்பாக வெள்ளத்திற்குப் பிறகு பல நிலங்களிலும் வாழை மரங்கள் சேதம் அடைந்து விட்டன. அதனால் வாழைத்தாருக்கு மிகுந்த தட்டுப்பாடாகிவிட்டது.
இன்றைய வாழைத்தார் நிலவரம் என்றால் நாட்டு வாழைத்தார் 900 ரூபாய் வரை விற்பனையாகின்றது, கோழிக்கோடு வாழைத்தார் 800 ரூபாய் வரை விற்பனையாகின்றது, பச்சை வாழைத்தார் 800 ரூபாய் வரை விற்பனையாகின்றது, செவ்வாழை 1600 ரூபாய் வரை விற்பனையாகின்றது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)