பல வங்கிகளும் ஹோம் லோன் எனப்படும் வீட்டு கடனை வழங்கி வருகின்றன. நீங்கள் புதிதாக ஒரு வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை வாங்க நினைத்தாலோ, வீடு கட்டுவதற்கான நிலத்தை வாங்க திட்டமிட்டாலோ அல்லது உங்கள் தற்போதைய வீட்டைப் புதுப்பிக்க, விரிவுப்படுத்த மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நினைத்தாலோ வங்கிகள் வழங்கும் ஹோம் லோனை பயன்படுத்தி கொள்ளலாம்.
வங்கிகள் இந்த கடனை நீண்ட காலம் திருப்பி செலுத்தும் வகையிலும், குறைந்த வட்டியிலும் வழங்குகின்றன. எனவே வீட்டுக் கடன்களை EMI-க்கள் மூலம் மாதா மாதம் திருப்பி செலுத்தி கொள்ளலாம். வீட்டு கடனை முழுமையாக திருப்பி செலுத்தியதும் நீங்கள் கடன் வாங்கிய போது வங்கியிடம் சமர்ப்பித்த ஆவணங்கள் உங்களிடம் திருப்பி தரப்படும் மற்றும் நிலுவை தொகை இல்லை என்ற சான்றிதழும் கொடுக்கப்படும்.
வீட்டுக் கடன் வட்டி விகிதங்களின் வகைகள்:
IDFC FIRST வங்கியின் கூற்றுப்படி, “ஒரு வீட்டு கடனானது ஃப்ளோட்டிங், ஃபிக்ஸ்ட் மற்றும் மிக்ஸ்ட் என மொத்தம் மூன்று வகையான வட்டி விகிதங்களில் வழங்கப்படுகிறது. இதில் ஃப்ளோட்டிங் என்பது RBI-ன் கொள்கை விகித மாற்றங்களைப் பொறுத்து மாறுகிறது. உதாரணமாக ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால், வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகளும் குறைக்கும். ஃபிக்ஸ்ட் வட்டி விகிதத்தில் குறிப்பிட்ட வீட்டு கடனுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட போது என வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டதோ, அதே வட்டி விகிதத்தை இறுதி வரை கொண்டிருக்கும். அதே நேரம் மிக்ஸ்ட் என்பது முதலில் ஃபிக்ஸ்ட் வட்டி விகிதத்தையும் பின்னர் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தையும் கொண்டிருக்கும்.
இதையும் படிக்க:
ஆயுஷ்மான் யோஜனாவில் செய்யப்படவிருக்கும் மாற்றங்கள்… விவரங்கள் இதோ !
உங்கள் வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை தீர்மானிப்பதில் உங்களின் கிரெடிட் ஸ்கோர், கடன் தொகை, LTV விகிதம், வேலை மற்றும் வட்டி விகிதத்தின் வகை போன்ற பல காரணிகளை வங்கிகள் கருத்தில் கொள்கின்றன. நீங்கள் ஹோம் லோன் வாங்க திட்டமிட்டிருந்தால் குறைந்த வட்டி விகிதத்தில் வீடு கடனை வழங்கும் வாங்கி எது என்பதை தேடி ஆராய்ந்து தேர்ந்தெடுக்கவும். ஏனென்றால் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் சிறிது குறைவாக இருந்தாலும் கூட, அது நீங்கள் நீண்ட காலம் திருப்பி செலுத்த போகும் கடனின் மொத்த செலவைக் குறைத்து பணத்தைச் சேமிக்க உதவும்.
ரூ.75 லட்சத்துக்கும் மேலான வீட்டு கடன்களுக்கான சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகள்:
பொதுத்துறை வங்கிகள்:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா : 8.50% முதல் – 9.85% வரை
பேங்க் ஆஃப் பரோடா : 8.40% முதல் -10.90% வரை
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா : 8.35% முதல் -10.90%வரை
பஞ்சாப் நேஷ்னல் பேங்க் : 8.40% முதல் -10.15% வரை
பேங்க் ஆஃப் இந்தியா : 8.40% முதல் -10.85% வரை
கனரா பேங்க் : 8.40% முதல் -11.15% வரை
யூகோ வங்கி : 8.45% முதல் -10.30% வரை
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா : 8.35% முதல் -11.15% வரை
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி : 8.50% முதல் -10.00% வரை
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் : 8.40% முதல் -10.60% வரை
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா : 8.45% முதல் – 9.80% வரை
தனியார் வங்கிகள்:
கோட்டக் மஹிந்திரா பேங்க் : 8.70% முதல்
ஐசிஐசிஐ பேங்க் : 8.75% முதல்
ஆக்சிஸ் பேங்க் : 8.75% முதல் -9.65% வரை
எச்எஸ்பிசி பேங்க் : 8.50% முதல்
சவுத் இந்தியன் பேங்க் : 8.70% முதல் – 11.70% வரை
கரூர் வைஸ்யா பேங்க் : 9.00% முதல் – 11.05% வரை
கர்நாடக பேங்க் : 8.50% முதல் -10.62% வரை
ஃபெடரல் பேங்க் : 8.80% முதல்
தனலக்ஷ்மி பேங்க் : 9.35% முதல் – 10.50% வரை
தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் : 8.60% முதல் – 9.95% வரை
பந்தன் பேங்க் : 9.16% முதல் -13.33% வரை
ஆர்பிஎல் பேங்க் : 8.90% முதல்
சிஎஸ்பி பேங்க் : 10.49% முதல் -12.34% வரை
ஹெச்டிஃப்சி பேங்க் லிமிடெட்.: 8.75 %முதல்
சிட்டி யூனியன் பேங்க் : 8.75%முதல் -10.50% வரை
.
&w=750&resize=750,375&ssl=1)
