இந்தியாவின் 77-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மான அமேசான் Great Freedom Festival 2024 என்ற ஸ்பெஷல் விற்பனையை நடத்தி வருகிறது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி துவங்கிய இந்த விற்பனை ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது.
கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2024 விற்பனையின் போது SBI கிரெடிட் கார்டு யூஸர்களுக்கு 10 சதவீத இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது வழங்குகிறது. அதே நேரம் இந்த சிறப்பு விற்பனை நிகழ்வின் போது விலைகள் மற்றும் ஸ்டாக்ஸ் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதை நினைவில் கொள்ளவும்.
Great Freedom Festival 2024 விற்பனையில் மொபைல்களுக்கான சிறந்த ஆஃபர்கள் கீழே:
ஒன்பிளஸ் நிறுவனத்தின் Nord CE 4 Lite:
தற்போது நடைபெற்று வரும் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2024 விற்பனையின் போது Nord CE 4 Lite மொபைலின் விலையானது வங்கி மற்றும் கூப்பன் சலுகைக்குப் பிறகு ரூ.16,999-ஆக குறைந்துள்ளது. இந்த மொபைல் வழக்கமாக ரூ.19,999-க்கு விற்கப்படும். நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட் போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் அதிகபட்சம் ரூ.18,300 கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். Nord CE 4 Lite மொபைலானது 50 மெகாபிக்சல் Sony LTE-600 பிரைமரி கேமரா சென்சார் மற்றும் 80W Supervooc ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் கூடிய 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன? – 9 August
ஆப்பிள் ஐபோன் 13:
சமீபத்தில் நடைபெற்ற பிரைம் டே ஆஃபர்களை நீங்கள் தவறவிட்டிருந்தால் ஐபோன் 13-ஐ தற்போது சிறந்த விலையில் வாங்கலாம். கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2024 விற்பனையில் வங்கி சலுகை உட்பட ரூ.47,799 என்ற விலையில் iPhone 13-ஐ வாங்குவதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. தவிர அமேசான் நோ-காஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் வழங்குகிறது, இது ரூ.43,100 வரை விலையை குறைத்து சூப்பர் டீலை வழங்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி:
சாம்சங் நிறுவனத்தின் Galaxy S21 FE 5G-யின் விலை வங்கி சலுகை உட்பட தற்போதைய அமேசான் சிறப்பு விற்பனையில் ரூ.24,999-ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோன் பொதுவாக ரூ.28,999-க்கு விற்கப்படுகிறது. Galaxy S21 FE 5G மொபைலானது ஸ்னாப்டிராகன் 888 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இதில் 8GB RAM மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களின் பழைய மொபைலை எக்ஸ்சேஞ்ச் செய்ய விரும்பினால் மாடலை பொறுத்து ரூ.26,650 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
iQoo Z9 Lite 5G:
இந்த 5G மொபைல் வங்கி சலுகை உட்பட தற்போது ரூ.9,999-க்கு கிடைக்கிறது. 4GB ரேம் கொண்ட இந்த மொபைலில் MediaTek Dimensity 6300 5G SoC ப்ராசஸர் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மொபைலில் 50-மெகாபிக்சல் Sony AI கேமரா சென்சார் உள்ளது மற்றும் IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது.
ஒன்பிளஸின் Nord 4 5G:
கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2024 விற்பனையில் OnePlus நிறுவனத்தின் Nord 4 5G மொபைலின் விலை வங்கி சலுகைக்கு பின் ரூ.27,999-ஆக குறைந்துள்ளது. வழக்கமான விற்பனை விலையை விட இது ரூ.2,000 குறைவு ஆகும். 8GB ரேம் கொண்ட இந்த மொபைலில் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 ப்ராசஸர் உள்ளது. இது 100W Supervooc ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீதான சிறந்த ஆஃபர்கள்:
டெல் 15 லேப்டாப்:
நீங்கள் ரூ.35,000 பட்ஜெட்டில் லேப்டாப் வாங்க திட்டம் வைத்திருக்கிறீர்களா.!! அப்படி என்றால் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2024-ல் Dell 15 லேப்டாப்பின் விலை ரூ.34,990-ஆக குறைந்துள்ளதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். 15.6-இன்ச் ஃபுல் -எச்டி டிஸ்ப்ளே கொண்ட இந்த லேப்டாப்பில் 12th Gen Intel Core i3 ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இது 8GB ரேம் மூலம் சப்போர்ட் செய்யப்படுகிறது. Windows 11 ஆப்ரேட்டிங் சிஸ்டமில் இயங்கும் இந்த லேப்டாப் 512GB SSD உடன் வருகிறது. இது ஸ்பிள்-ரெசிஸ்டென்ட் கீ போர்டை கொண்டுள்ளது.
ஹானர் பேட் 9:
இந்த சிறப்பு விற்பனையில் ஆண்ட்ராய்டு 13-ல் இயங்கும் Honor Pad 9 டேப்லெட்டின் விலை ரூ.20,999-ஆக குறைந்துள்ளது. ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 SoC ப்ராசஸர் இதில் உள்ளது, இது 8GB ரேம் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 17 மணிநேரம் வரை பேட்டரி லைஃபை வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது. மேலும் இந்த டேப்லெட்டுடன் இலவசமாக ப்ளூடூத்-பவர்ட் கீபோர்டு கேஸை வாடிகையாளர்கள் பெறுவார்கள்.
ஃபயர் டிவி ஸ்டிக்:
அமேசானின் Fire TV Stick-ஐ பயன்படுத்த உங்களுக்கு HDMI போர்ட் மட்டுமே தேவை, இதன் மூலம் உங்கள் பழைய டிவி-யை ஸ்மார்ட் டிவி-யாக மாற்றலாம். நடைபெற்று வரும் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2024-ல் ஃபயர் டிவி ஸ்டிக் ரூ 2,999.என்ற குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)