• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கேரளாவிற்கு வாங்கிச்செல்லப்படும் வாழைத்தார்கள்… வரத்து குறைவால் விலை கிடுகிடு உயர்வு…

GenevaTimes by GenevaTimes
August 8, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
கேரளாவிற்கு வாங்கிச்செல்லப்படும் வாழைத்தார்கள்… வரத்து குறைவால் விலை கிடுகிடு உயர்வு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருநெல்வேலியில் வரத்துக் குறைவு காரணமாக வாழைப் பழங்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. டவுன் நயினார்குளம் மார்க்கெட் மற்றும் பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு இப்போது வாழைக்குலைகளின் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. உள்ளூர் விளைச்சலும் குறைவு காரணமாக, வியாபாரிகளின் தேவைக்கேற்ப வாழைக்குலைகளை வழங்க முடியாமல் திண்டாடுகின்றனர்.

திருநெல்வேலியைப் பொறுத்த வரை ரூ.10க்கு விற்ற ஒரு செவ்வாழைப் பழம் தற்போது ரூ.18 ஆக உயர்ந்துள்ளது. ரூ.4க்கு விற்ற ஒரு கோழிக்கோடு பழம், தற்போது ரூ.10க்கு விற்கிறது. நாட்டுப் பழமும் ரூ.4ல் இருந்து ரூ.10க்கு இப்போது உயர்ந்துள்ளது. 100 பழங்கள் கொண்ட ஒரு செவ்வாழை தார் ரூ.1400லிருந்து ரூ.2 ஆயிரமாக விலையேற்றம் கண்டுள்ளது. நாட்டுப் பழம் ஒரு தார் ரூ.350லிருந்து ரூ.700க்கும், கோழிக்கோடு ஒரு தார் ரூ.300லிருந்து ரூ.700 ஆக உயர்ந்துள்ளது.

விளம்பரம்

பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டிற்கு ஏரல், குரும்பூர், திருச்செந்தூர், ஆரல்வாய்மொழி, தூத்துக்குடி, குரும்பூர், நாசரேத், காவல் கிணறு, வள்ளியூர் மற்றும் அம்பாசமுத்திரம், ஆலங்குளம், முக்கூடல், கடையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வாழைத்தார்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

இதையும் படிங்க: ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ மலர்… நீலகிரியில் மலர்ந்த பிரம்ம கமலம்…

இவ்வாறு வரும் வாழைத்தார்களை கேரளா மொத்த வியாபாரிகள் ஏலத்திற்கு எடுத்து திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோழிக் கோடு உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்வர். மேலும் பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரும் உள்ளூர் வியாபாரிகள் தென்காசி, சுரண்டை, ஆலங்குளம், சேர்ந்தமரம், பாவூர்சத்திரம், கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, கல்லூரணி, அரியப்புரம், ஆவுடையானூர், அடைக்கலப்பட்டணம், செட்டியூர், திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் கொள்முதல் செய்து செல்வர்.

விளம்பரம்

கடந்த சில மாதங்களாகப் பருவமழை பொய்த்துப் போனதால் வாழை விளைச்சல் இன்றி மார்க்கெட்டிற்கு குறைந்தளவே வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பொதுவாக தினமும் 1500 முதல் 2000 வாழைத்தார்கள் பாவூர்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும். ஆனால் மழை இல்லாத காரணத்தினால் தினமும் 400 முதல் 600 வாழைத்தார்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன.

வரத்து குறைவு மற்றும் ஓணம் பண்டிகை வருவதையொட்டி கேரளா வியாபாரிகளும் கொள்முதல் செய்ய அதிகளவில் வருவதால் விற்பனையில் ஏற்றம் காணப்பட்டு ரூ.200க்கு விற்ற நாட்டு வாழைத்தார் ரூ.600க்கும், கோழிக்கோடு ரூ.200 லிருந்து ரூ.400ம், கதலி ரூ.100லிருந்து 300க்கும், கற்பூரவல்லி ரூ.300லிருந்து 600க்கும் விலை அதிகரித்துள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க: ரயில் போக்குவரத்தில் திடீர் மாற்றம்… மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் ஏத்தம் பழம் ரூ.150லிருந்து ரூ.800க்கும், மட்டி பழம் ரூ.600லிருந்து 700க்கும், செவ்வாழை ரூ.1100லிருந்து ரூ.1700க்கும், சக்கை வாழை கிலோ ஒன்றுக்கு ரூ.20லிருந்து ரூ.40க்கும், ரோபஸ்டா 200லிருந்து 600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.

Read More

Previous Post

Duplicate Pan card வேணுமா? எப்படி பெறலாம் னு பாக்கலாம்….

Next Post

ஜப்பானில் 7.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது | 7.1-magnitude earthquake hits Japan: Tsunami warning issued

Next Post
ஜப்பானில் 7.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது | 7.1-magnitude earthquake hits Japan: Tsunami warning issued

ஜப்பானில் 7.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது | 7.1-magnitude earthquake hits Japan: Tsunami warning issued

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin