எம்ப்ளாயிஸ் ப்ராவிடன்ட் ஃபண்ட் (ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி – EPF) என்பது மாதாந்திர ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான அரசு ஆதரவு சேமிப்புத் திட்டமாகும். ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தில் பணியாளர்கள் மற்றும் அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களின் நிதி பங்களிப்பு இருக்கும்.
வட்டி விகிதம்:
ஒவ்வொரு ஆண்டும் EPF திட்டத்திற்கான வட்டி விகிதத்தை அரசே தீர்மானிக்கிறது. அந்த வகையில் EPF திட்டத்திற்கான தற்போதைய வட்டி விகிதம் என்ன தெரியுமா..? தற்போது ஆண்டுக்கு 8.25 சதவீத வட்டியை , EPFO வழங்குகிறது. இந்த வட்டியின் மூலம் EPF திட்டம் நிதி ரீதியாக ஊழியர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க உதவும் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
EPFO – ஓய்வூதிய வயது:
பொதுவாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (EPFO) தனது திட்டத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு 58 வயதை அடைந்தவுடன் ஓய்வூதியம் வழங்குகிறது.
EPFO-ன் ஓய்வூதியத்தை முன்கூட்டியே பெற வயது வரம்பு:
எனினும் EPFO அமைப்பின் கீழ் முன்கூட்டியே ஓய்வூதியம் பெற ஒரு உறுப்பினர் குறைந்தபட்சம் 50 வயதுடையவராக இருக்க வேண்டும். அதே நேரம் வழக்கமான பென்ஷனை பெற இந்த வயது வரம்பு ஏற்கனவே சொன்னதை போல 58 ஆகும்.
ஒரு EPFO உறுப்பினர் தனது பங்களிப்பு இல்லாமல் 60 வயது வரை தனக்கான ஓய்வூதியத்தை பெறாமல் ஒத்திவைக்கலாம். அந்த வகையில் ஒருவர் தனது 58 வயதிற்கு பதிலாக 60 வயதிற்கு மேல் ஓய்வூதியத்தை பெறும் விருப்பத்தை தேர்வு செய்தால், ஒத்தி வைக்கும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 4 சதவீதம் வட்டியை பெறுவார்கள்.
ஓய்வூதியத்திற்கான தகுதி:
EPFO திட்டத்தின் ஓய்வூதிய பலன்களைப் பெறுவதற்கான முன்நிபந்தனைகளில் ஒன்று 10 வருட சேவையை ஒரு ஊழியர் நிறைவு செய்ய வேண்டும். அதாவது இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பங்களிப்பு ஒருவருக்கு தேவை.
EPFO-ல் ஒரு பணியாளரின் குறைந்தபட்ச/கட்டாய பங்களிப்பு:
ஒரு ஊழியரின் குறைந்தபட்ச பங்களிப்பு மாதத்திற்கு ரூ.1800-ஆகவும், அதிகபட்சமாக 12% EPF ஆகவும் இருக்க வேண்டும்.
ரூ.1.5 கோடி பென்ஷன் கார்பஸ் உருவாக்க உங்கள் மாதாந்திர பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்?
ஓய்வு பெறும்போது ரூ.1.5 கோடி பெற, ஒருவர சுமார் 35 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.6,400 செலுத்த வேண்டும். இப்படி கட்டி வந்தால் மெச்சூரிட்டியின் போது, தற்போது வழங்கப்படும் 8.25 சதவீத வட்டி விகிதத்தில் மொத்தம் ஒருவர் ரூ.1,51,47,472.81 ஓய்வூதியமாக பெறுவார்.
Also Read |
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!
ரூ.2.5 கோடி பென்ஷன் பெற மாதாந்திர பங்களிப்பு எவ்வளவு இருக்க வேண்டும்?
ஓய்வு பெறும்போது ரூ.2.5 கோடி நிதி பெற, 35 ஆண்டுகளுக்கு ஒருவர் மாதம் ரூ.10,600 செலுத்த வேண்டும். தற்போதைய 8.25 சதவீத வட்டி விகிதத்தில் மெச்சூரிட்டி பீரியட்டின் போது மொத்தம் ரூ.2,50,88,001.8 நிதி கிடைக்கும்.
ரூ 3.5 கோடி ஓய்வூதியம் பெற மாதாந்திர பங்களிப்பு எவ்வளவு இருக்க வேண்டும்?
ஓய்வு பெறும்போது ஒருவர் EPF மூலம் ஒருவர் ரூ. 3.5 கோடி பெற, 37 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.12,500 செலுத்த வேண்டும். தற்போதைய 8.25 சதவீத வட்டி விகிதத்தில் மெச்சூரிட்டியின் போது மொத்தம் ரூ.3,50,05,925.84 கிடைக்கும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)