இந்த பூமி வெறும் மனிதர்களுக்கு மட்டும் இல்லை, அனைத்து ஜீவராசிகளுக்குமானது என்ற கருத்து நிறையவே இருக்கிறது. எனவே, பலரும் தாங்கள் விரும்பிய விலங்குகளை வளர்க்கின்றனர். அப்படி வளர்க்க முடியாத பலர் இன்றைய சமூக ஊடக வளர்ச்சியில் உலா வரும் விலங்குகளின் சேட்டைகளை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள். அப்படி பலரையும் சமூக வலைதளங்களில் மகிழ்வித்து வரும் ஒரு பூனையின் பெயர் நளா.
இந்த பூனைக் குட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் மூலம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.12 லட்சத்தை சம்பாதிக்கிறது. இவ்வாறு இந்த பூனைக்குட்டி இதுவரை ரூ.895 கோடியை சம்பாதித்து, உலகின் பணக்கார பூனையாக வலம் வருகிறது என்றால் பலருக்கும் நம்ப முடியாது. நீங்க நம்பலனாலும் அதா நெசம்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு செல்லப்பிராணி விற்பனை மையத்தில் இருந்து அதை வாரிசிரி மாதச்சிட்டிபன் என்பவர் வாங்கியதில் இருந்து தொடங்குகிறது, அதன் இன்ஸ்டா பயணம். 2012ஆம் ஆண்டில் நளாவின் ஒரு செயலை இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்தார். அது பலரையும் ஈர்த்தது. இதனால், வியப்படைந்த அவர், பூனைக்குட்டி நளாவின் ஒவ்வொரு செயலையும் படம்பிடித்து, இன்ஸ்டாவில் பகிரத் தொடங்கினார்.
தற்போது நளாவின் பாலோயர்களின் எண்ணிக்கை 4.5 மில்லியனுக்கும் அதிகம். இன்ஸ்டாகிராமில் இதுவரை நளா தொடர்பாக 7,267 இடுகைகள் பகிரப்பட்டுள்ளன. இதன் மூலம் பூனைக்குட்டி நளா 84 மில்லியன் பவுண்டுகள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.895 கோடியை சம்பாதித்துள்ளது.
சமூக ஊடகங்களுக்கு அப்பால், பூனை உணவு பிராண்ட் மூலமாகவும் நளா கணிசமான தொகையை சம்பாதித்து வருகிறது. இதனால் இன்னும் அதிகமாக சம்பாதிப்பதோடு, இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடரும் பூனைக்கான கின்னஸ் உலக சாதனையையும் நளா படைத்துள்ளது. அத்துடன் 4 மனித போட்டியாளர்களை விஞ்சி, ஆண்டின் டிக்டோக்கர் பட்டத்தையும் வென்றுள்ளது.
இதையும் படிங்க:
பாம்பு பிடிப்பவரை கடித்த ராஜநாகம் மரணம் – வினோதம் நடந்தது எப்படி?
நளாவை வளர்க்கத் தொடங்கியதில் இருந்து, அதை வீடியோ எடுத்து சமூக ஊடக கணக்குகளை நிர்வகிப்பதே தனது முழு நேர வேலையாக மாறிவிட்டதாக கூறியுள்ள உரிமையாளர், ஒரு கணிசமான தொகையை விலங்குகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
