• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பி.எஃப் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. EPFO முக்கிய முடிவு

GenevaTimes by GenevaTimes
August 7, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
பி.எஃப் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. EPFO முக்கிய முடிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சுமார் ஏழு கோடி ஆக்டிவ் சப்ஸ்கிரைபரைக் கொண்டுள்ளது மற்றும் அவர்களுக்காக 24/7 பல மொழி தொடர்பு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த மையம் வருடம் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் மற்றும் புகார்களை பதிவு செய்வதற்கும், ஏதேனும் சிக்கல்களுக்கு உதவி பெறுவதற்கும் ஒருங்கிணைந்த அழைப்பு மையத்தை அமைத்துள்ளது. இதன் மூலம் சப்ஸ்கிரைபர்கள் தங்களுக்குத் தேவையான உதவியை எளிதாக பெறலாம்.

புகார்களை தீர்ப்பதில் தாமதம் மற்றும் நிராகரிக்கப்பட்ட தீர்வு கோரிக்கைகளின் விகிதங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் சமூக ஊடக தளங்களில் பின்னடைவை எதிர்கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வருடம் முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் இந்த 24/7 தொடர்பு மையத்தை நிறுவுவதற்கு EPFO ​​ஒரு டெண்டரை வெளியிட்டுள்ளது. இது தரமான நபர்களுடன், தற்போதைய EPFOஇன் புகார் பதிவு செய்யும் போர்ட்டலை (EPFIGMS) மேம்படுத்தி மற்றும் அதிநவீன புகார் அமைப்புடன் மாற்றக்கூடிய வலுவான அமைப்பாக செயல்படும்.

விளம்பரம்

இது மக்களுக்கு எவ்வாறு பயனளிக்கும்?

ஹெல்ப்லைன் எண்கள், பல்வேறு அலுவலகங்களில் லேண்ட்லைன் போன்கள், வாக்-இன்கள், குறைகளை பதிவு செய்யும் இணையதளங்கள், வாட்ஸ்அப், சமூக ஊடகங்கள் (பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உட்பட), பிசிக்கல் மெயில், சாட்பாட், UMANG ஆப் மற்றும் இ-மெயில் போன்ற பல சேனல்களில் உள்ள குறைகளைக் கையாள்வதே தங்களின் நோக்கம் என்று EPFO ​​தெரிவித்துள்ளது. EPFOஇன் தலைமை அலுவலகத்தை அதன் மண்டல மற்றும் பிராந்திய அலுவலகங்களுடன் இணைப்பதன் மூலம், இந்த அமைப்பு சிக்கலைத் தீர்க்கும். மேலும், இது பங்குதாரர்களின் பிரச்சனைகளை முன்கூட்டியே தீர்க்கவும் மற்றும் அவர்களுக்கு ரியல் டைம் அடிப்படையில் தெரிவிக்கவும் முயல்கிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஐடிஆர் தாக்கல் 2024: பான் கார்டு மூலம் ஆன்லைனில் டேக்ஸ் ரீஃபன்ட் ஸ்டேட்டஸை எவ்வாறு சரிபார்க்கலாம்?…

23 மொழிகளில் ஆதரவு:

புதிய தொடர்பு மையம் 23 மொழிகளை ஆதரிக்கும். இந்த மொழிகளில் இந்தி, ஆங்கிலம், அஸ்ஸாமி, மைதிலி, காஷ்மீரி, போடோ, டோக்ரி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மணிப்பூரி, மராத்தி, பெங்காலி, மலையாளம், நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, சந்தாலி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகியவை அடங்கும்.

இதையும் படிக்க:
வருமான வரி ரீஃபன்ட் எப்போது கிடைக்கும்? பணத்தை பெற இந்த விஷயங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள்…

விளம்பரம்

EPFO ​​ஆனது தனது சேவையை விரிவுப்படுத்துவதையும், தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், குறைகளை விரைவாக தீர்ப்பதன் மூலம் சப்ஸ்கிரைபர்களின் திருப்தியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஓய்வூதிய பலன்கள் மற்றும் வயதான காலத்தில் பாதுகாப்பான வாழ்க்கையை வழங்குவதற்காக இந்திய அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம் மார்ச் 1952இல் தொடங்கப்பட்டது. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 830 நாட்களுக்குப் பிறகு EPFO நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

.

Read More

Previous Post

ஷேக் ஹசீனா பதவி விலக காரணமான நஹித் இஸ்லாம் யார்? | Who is Nahid Islam who caused Sheikh Hasina to resign

Next Post

வங்கதேசம் மாணவர் போராட்டம் வெடித்தது எப்படி? ஷேக் ஹசீனா அவசர அவசரமாக வெளியேறியது ஏன்?

Next Post
வங்கதேசம் மாணவர் போராட்டம் வெடித்தது எப்படி? ஷேக் ஹசீனா அவசர அவசரமாக வெளியேறியது ஏன்?

வங்கதேசம் மாணவர் போராட்டம் வெடித்தது எப்படி? ஷேக் ஹசீனா அவசர அவசரமாக வெளியேறியது ஏன்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin