அசாதாரண சூழல் நிலவும் நிலையில் வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வாரிசுதாரர்களுக்கு அதிக இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இதையடுத்து ராணுவம் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், இடைக்கால அரசு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகம்மது ஷகாபுதீன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க : இங்கிலாந்தில் தஞ்சம் அடையும் ஷேக் ஹசீனா? பரபரப்பின் உச்சத்தில் வங்கதேசம்
இதனிடையே இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமை ஏற்க வேண்டும் என வங்கதேச மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆலோசகராக செயல்பட்டு வரும் யூனுஸ், ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த நாள்தான் வங்கதேசத்தின் இரண்டாவது விடுதலை நாள் என குறிப்பிட்டிருந்தார்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
