• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவின் மிகப்பெரிய DLF ரியல் எஸ்டேட் அதிபர் சொத்து மதிப்பு தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
August 5, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவின் மிகப்பெரிய DLF ரியல் எஸ்டேட் அதிபர் சொத்து மதிப்பு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


1946ம் ஆண்டு, சவுத்ரி ராகவேந்திர சிங் டெல்லி லேண்ட் அன்ட் ஃபைனான்ஸ் (DLF) என்ற நிறுவனத்தை தொடங்கினார். டெல்லியில் உள்ள 22 நகர்ப்புற காலனிகளை உருவாக்கியதன் மூலம் இவரது வணிகம் தொடங்கியது. இந்திய ராணுவத்தில் மேஜராக பணியாற்றியுள்ள சவுத்ரி, டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் தனது நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவராகவும் இவர் உள்ளார். ராணுவத்தை விட்டு தொழில்துறையில் பணியாற்ற தொடங்கிய பிறகு, டெல்லியின் தேசிய தலைநகர் பகுதியை நகர்ப்புறமாக மாற்றியமைத்ததில் இவருக்கு முக்கிய இடமுண்டு. பிரிவினையின்போது தங்கள் சொந்த ஊரைவிட்டு தலைநகருக்கு இடம் பெயர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் இவரது முயற்சியின் பலனாக வீடுகளைப் பெற முடிந்தது.

விளம்பரம்

1985ல் குருகிராமை அபிவிருத்தி செய்ய முடிவெடுத்தது DLF நிறுவனம். அதற்கு முன்பு வரை இந்த இடம் பலருக்கும் தெரியாமல் தான் இருந்தது. வளர்ந்து வரும் இந்திய தொழில் பிரிவினர்களுக்கான வசதி நிறைந்த குடியிருப்பு மற்றும் பணியிடமாக குருகிராமை உருவாக்கியது DLF. தற்போது இந்திய பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக DLF திகழ்கிறது. இந்நிறுவனம் 24 நகரங்களிலும் 15 மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. சில்லறை, வணிக மற்றும் குடியிருப்பு சொத்துக்களைக் கையாண்டு வருகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
Aadhaar Card : உங்க ஆதார் கார்டை அப்டேட் செய்யவில்லையா..? இந்த தேதிதான் கடைசி… உடனே பண்ணிடுங்க!

ராகவேந்திர சிங்கின் மருமகனான குஷால் பால் சிங், DLF-ஐ மிகப்பெரிய நிறுவனமாக உயர்த்தியதில் முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளார். 1961ல் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று DLF நிறுவனத்தில் சேர்ந்தார் கே.பி.சிங். தற்போது குருகிராம் என்று அழைக்கப்படும் குர்கானில், இவரது வழிகாட்டுதலின் கீழ் DLF நிறுவனம் விரிவடையத் தொடங்கியது. புகழ்பெற்ற வழக்கறிஞர் சவுத்ரி முக்தர் சிங், குஷால் பால் சிங்கின் தந்தை ஆவார். அவர் இங்கிலாந்தில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்த குஷால் சிங், பிரிட்டிஷ் அதிகாரி சேவை தேர்வு வாரியம் மூலம் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். 1961-ல் DLF நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கிய கே.பி.சிங், 1969ம் ஆண்டு மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் 2020ம் ஆண்டு தனது பதவியை விட்டு விலகினார் சிங்.

விளம்பரம்

இதையும் படிக்க:
அனந்த் அம்பானி வாட்ச்சின் விலை எவ்வளவு தெரியுமா..? கேட்டாலே தலைசுற்றும்! – அப்படி என்ன ஸ்பெஷல்?

தற்போது, ​​கே.பி.சிங்கின் மகன் ராஜீவ் சிங், தொழிலை கவனித்து வருகிறார். 2023–2024 நிதியாண்டில் இவருக்கு ரூ.27.30 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. 2023ம் ஆண்டின் Grohe-Hurun இந்தியா ரியல் எஸ்டேட் வெளியிட்டுள்ள பட்டியலில், ரூ.1,24,420 கோடி சொத்து மதிப்புடன், பணக்கார ரியல் எஸ்டேட் தொழில்முனைவோராக இடம் பெற்றுள்ளார் 65 வயதாகும் ராஜீவ் சிங். ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்புடன், இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமாக DLF கருதப்படுகிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! | SG Tamilan

Next Post

பயணியின் தலையில் பேன்; அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்… என்ன சொல்கிறது American Airlines?

Next Post
பயணியின் தலையில் பேன்; அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்… என்ன சொல்கிறது American Airlines?

பயணியின் தலையில் பேன்; அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்... என்ன சொல்கிறது American Airlines?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin