உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 26ஆம் தேதி வண்ணமயான கொண்டாட்டத்துடன் பாரிஸில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான வீரர் மற்றும் வீராங்கனைகள் பாரீஸ் சென்றுள்ளனர். இந்திய விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவியும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினருமான நீடா அம்பானியும் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து இருவரும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனை சந்தித்தனர்.
பின்னர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரும், ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவருமான நீடா அம்பானி, பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஹவுஸில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கிச் சுடும் அணியை பாராட்டினார். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா ஏற்கனவே இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ஹரியானாவின் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். பின்னர் நேற்று, சரப்ஜோத் சிங் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் மனு பாக்கருடன் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்தியா ஹவுஸில் நேற்று சரப்ஜோத் சிங்கை நீடா அம்பானி கவுரவித்தார். நீடா அம்பானி சரப்ஜோத்தை ‘தேசத்தின் பெருமை’ என்று அழைத்தார். விழா முடிந்ததும் நீடா அம்பானி இந்திய துப்பாக்கிச் சுடும் குழுவினருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். வரும் நாட்களில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்கும் வெற்றியடைய வாழ்த்தினார்.
இந்தியா ஹவுஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அர்ஜுன் பாபுதா, ஹர்மீத் தேசாய், இளவேனில் வளரிவன், அர்ஜுன் சிங் சீமா, ரிதம் சங்வான், சரத் கமல், ஹர்மீத் தேசாய், ஜி சத்யன், சுமித் நாகல், ரோஹன் போபண்ணா, ஸ்ரீராம் பாலாஜி, ஸ்ரீஹரி நடராஜ் உள்ளிட்ட இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)