EdelGive Foundation மற்றும் Hurun Report 2021 அறிக்கையின்படி, டாடா குழுமத்தின் நிறுவனராக ஜாம்செட்ஜி டாடா கடந்த நூற்றாண்டின் மிகவும் தொண்டு செய்யும் நபராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவர், ரத்தன் டாடா, அசீம் பிரேம்ஜி மற்றும் ஷிவ் நாடார் போன்றவர்களை விஞ்சி ரூ.8,29,734 கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்துள்ளார். இந்த பட்டியலில் பில்கேட்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜாம்செட்ஜி டாடா கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிக அக்கறையும் நன்கொடை வழங்கினார். 1892ல் தனது தொண்டு பணிகளை அவர் தொடங்கினார். அவர் 1904 இல் மறைந்த நிலையில், டாடா குழுமத்தின் தொண்டு முயற்சிகளை மேற்பார்வையிடும் ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ் அவரது தாராள மனப்பான்மை தொடர்கிறது.
உலகின் 50 தலைசிறந்த நன்கொடையாளர்களில் மற்றொரு இந்தியரான அசீம் பிரேம்ஜி மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். விப்ரோ நிறுவனர் பிரேம்ஜி ரூ,1,76,000 கோடியை நன்கொடையாக கொடுத்துள்ளார். குஜராத்தில் ஜோராஸ்ட்ரியன் பார்சி குடும்பத்தில் பிறந்த ஜாம்செட்ஜி டாடா பல சவால்களை சமாளித்து, குடும்ப மரபுகளை கடைப்பிடித்து தொழிலைத் தொடங்கியவர்.
இதையும் படிங்க:
உலகில் அதிகளவில் மக்கள் வாழும் நகரம் – இந்தியாவில் உள்ள இந்த நகரம் தெரியுமா?
ஜாம்செட்ஜி டாடா திருமணம் செய்து, டோராப்ஜி டாடா மற்றும் ரத்தன்ஜி டாடா என்ற இரு மகன்களைப் பெற்றார். டாடா பாரம்பரியத்தின் தற்போதைய வாரிசுகள், டாடா குழுமம் தொடர்ந்து தொண்டு பணிகளை செய்வதை உறுதி செய்கின்றனர். ஜாம்செட்ஜி டாடாவின் வாழ்க்கை தொடர்ந்து கருணை மற்றும் தாராள மனப்பான்மை கொண்டதாக நீடித்தது. அது இன்று வரை நீடித்து வருகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
