• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

காய்கறி விலையை ஆட்டம் காண வைக்கும் ஆடி மாதம்… இன்றைய மார்க்கெட் நிலவரம் என்ன தெரியுமா..?

GenevaTimes by GenevaTimes
July 29, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
காய்கறி விலையை ஆட்டம் காண வைக்கும் ஆடி மாதம்… இன்றைய மார்க்கெட் நிலவரம் என்ன தெரியுமா..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திண்டுக்கல், காந்தி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து தற்போது அதிகரித்துள்ள நிலையில் காய்கறிகளின் விலையும் குறைந்து வருகிறது.

மேலும் ஆடி மாதம் என்பதால் சுபமுகூர்த்த நிகழ்வுகள் நடைபெறாத காரணத்தால் காய்கறிக்கான தேவையும் குறைந்துள்ளது. இதனால் திண்டுக்கல் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை குறைந்து காணப்படுகிறது.

ஆனால் ஊட்டியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கேரட் வரத்துக் குறைந்துள்ளதால் கேரட்டின் விலை உயர்ந்து காணப்படுகிறது. முன்பு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையான கேரட் இன்று கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை ஆகின்றது.

விளம்பரம்

நாட்டுத் தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி இன்று கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. 70 ரூபாய் வரை விற்பனையான முருங்கைக்காய் இன்று கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இது குறித்து வியாபாரி கணேசன் கூறுகையில், “ஆடி மாதம் என்பதால் காய்கறிகளின் விற்பனை குறைந்து காணப்படுகிறது, அதனால் விலையும் குறைந்தே காணப்படுகிறது. ஊட்டியிலிருந்து வரும் கேரட் அங்கு மழை காரணமாக வரத்து குறைந்து காணப்பட்டதால் இங்குக் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை ஆகின்றது.

விளம்பரம்

மேலும் கத்திரிக்காயின் வரத்துக் குறைவால் கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகின்றது மற்ற காய்கறிகள் எல்லாம் பொது மக்களுக்குக் கட்டுப்படி ஆகும் வகையிலே விற்பனையாகின்றது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தெற்கு ரயில்வேயில் 2,438 காலியிடங்கள்… 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்…

அந்தவகையில் திண்டுக்கல் காய்கறி மார்க்கெட்டில் இஞ்சி கிலோ ரூ.150, தக்காளி கிலோ ரூ.30, சின்ன வெங்காயம் கிலோ ரூ.40, பெரிய வெங்காயம் கிலோ ரூ.45, கேரட் ரூ.100, ஊட்டி பீட்ரூட் கிலோ ரூ.50, நாட்டு பீட்ரூட் கிலோ ரூ.30, பச்சை மிளகாய் கிலோ ரூ.130, வெண்டைக்காய் கிலோ ரூ.30, கத்தரிக்காய் கிலோ ரூ.80-100, பாகற்காய் கிலோ ரூ.70, புடலங்காய் கிலோ ரூ.30, மாங்காய் கிலோ ரூ.40, முருங்கைக்காய் கிலோ ரூ.50, உருளைக்கிழங்கு கிலோ ரூ.40, பூண்டு கிலோ ரூ.250, காலிஃப்ளவர் ரூ.50, முட்டைக்கோஸ் கிலோ ரூ.40க்கு விற்பனையாகி வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

.

Read More

Previous Post

ஆகஸ்ட் மாதம் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?

Next Post

மத்திய பட்ஜெட் அறிவிப்பால் புத்துயிர் பெறும் பம்ப்செட் தொழில்! | Pumpset Industry to be Revived by Central Budget Announcement!

Next Post
மத்திய பட்ஜெட் அறிவிப்பால் புத்துயிர் பெறும் பம்ப்செட் தொழில்! | Pumpset Industry to be Revived by Central Budget Announcement!

மத்திய பட்ஜெட் அறிவிப்பால் புத்துயிர் பெறும் பம்ப்செட் தொழில்! | Pumpset Industry to be Revived by Central Budget Announcement!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin