
ஒலிம்பிக் 2024 தற்போது பாரிஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பேட்மிண்டன் போட்டியில் சிங்கப்பூரின் இயோ ஜியா மின் அகதிகள் குழுவைச் சேர்ந்த டொர்சா யாவாரிவாபாவை 21-7,21-8 செட் கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
அடுத்ததாக மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த Kate Foo Kune உடன் ஜியா மின் எதிர்கொள்வார்.
இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றால் Round of 16 கட்டத்துக்கு தகுதி பெறுவார்.
நேற்று(ஜூலை 27) நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு போட்டி நடைபெற்றது.
அதில் மலேசிய அணியுடன் சிங்கப்பூரின் டெர்ரி ஹீயும், ஜெஸிகா டானும் போட்டியிட்டனர்.21-23,12-21 செட் கணக்கில் தோற்றனர்.
The post ஒலிம்பிக்-2024 : பேட்மிண்டன் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை வெற்றி!! appeared first on SG Tamilan.

