ஆதார் கார்டு என்பது இந்தியர்களின் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். இந்த ஆவணம் அடையாளம் காண்பதற்கு மட்டுமல்லாமல், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
எனவே இந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து தகவல்களும் அப்டேட்டாக இருக்க வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) என்பது இந்திய அரசாங்கத்தால் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். உங்கள் ஆதார் அட்டையில் மாற்றங்கள் செய்ய அனுமதி வழங்குகிறது.
இருப்பினும் உங்கள் பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி போன்ற சில விவரங்களை எத்தனை முறை மாற்றலாம் என்பதற்கு குறிப்பிட்ட விதிகள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்.
மாற்றங்களுக்கான வரம்புகள்:
பெயர்: உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் பெயரை அதிகபட்சம் இரண்டு முறை மாற்றலாம்.
பாலினம் மற்றும் பிறந்த தேதி: பாலினம் மற்றும் பிறந்த தேதி ஆகிய இரண்டுமே உங்கள் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும்.
முகவரி: உங்கள் முகவரியை புதுப்பிப்பதற்கு வரம்பு எதுவும் இல்லை.
பெயர் மாற்றுவதற்கான செயல்முறை:
உங்கள் பெயரை மாற்ற, ஆதார் பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு சென்ற பின்னர் அவர்கள் தரும் ஃபார்மை நிரப்பிய பின்னர் அவர்கள் கேட்கும் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். உங்கள் பயோமெட்ரிக் டேட்டா அங்கீகாரத்திற்காக எடுத்துக் கொள்ளப்படும். உங்கள் அப்டேட் ஸ்டேடஸை கண்காணிக்க, ட்ராக்கிங் நம்பருடன் கூடிய ரசீது உங்களிடம் அளிக்கப்படும். இந்த சேவைக்கான கட்டணம் ரூ. 50 ஆகும்.
இதையும் படிக்க:
சொத்து உங்களுடையது ஆக பத்திரப்பதிவு செய்தால் மட்டும் போதாது… சட்டம் சொல்வது என்ன தெரியுமா?
பிறந்த தேதி மாற்றுவதற்கான செயல்முறை:
பிறந்த தேதியை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும் என்பதால், ஆதார் பதிவு மையத்திற்குச் செல்வது நல்லது. தேவையான ஆவணங்களில் PAN கார்டு, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது பல்கலைக்கழகம் வழங்கிய சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். ஃபார்மை பூர்த்தி செய்து உங்கள் பயோமெட்ரிக் விவரங்களை வழங்க வேண்டும். ஆவணங்களை சரிபார்த்த பிறகு, உங்கள் பிறந்த தேதி புதுப்பிக்கப்படும். இந்த சேவைக்கான கட்டணம் ரூ. 50 ஆகும்.
முகவரி மாற்றுவதற்கான செயல்முறை:
ஆன்லைனில் அல்லது ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று உங்கள் முகவரியைப் புதுப்பிக்கலாம். ஆன்லைனில் எப்படி செய்வது என்பது பற்றி பார்ப்போம்:
1. அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்திற்குச் செல்லவும்: [myaadhaar.uidai.gov.in](https://myaadhaar.uidai.gov.in/).
2. உங்களின் 12 இலக்க ஆதார் எண் மற்றும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP மூலம் லாகின் செய்யவும்.
3. பின் மெனுவிலிருந்து ‘ஆதார் அப்டேட்’ ஆப்ஷனை செலக்ட் செய்து ப்ரொசீட் செய்யவும்.
4. ‘முகவரி’ என்பதை செலக்ட் செய்து, புதிய முகவரி விவரங்களை சமர்ப்பிக்கவும்.
5. வேலிட் அட்ரஸ் ப்ரூஃப் ஆவணங்களை அப்லோட் செய்யவும்.
6. ரூ.50 கட்டணம் செலுத்தி முடிக்கவும்.
7. உங்கள் அப்டேட் ஸ்டேடஸை கண்காணிப்பதற்கான ரசீதைப் பெறுவீர்கள், மேலும் முகவரி புதுப்பிக்கப்பட்டவுடன் கன்ஃபர்மேஷன் மெசேஜ் அனுப்பப்படும்.
முகவரி மாற்றத்திற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்கள்:
பாஸ்போர்ட்
பேங்க் ஸ்டேட்மென்ட் அல்லது பாஸ்புக்
ரேஷன் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
ஓட்டுனர் உரிமம்
ஓய்வூதிய அட்டை
சொத்து வரி ரசீது
இன்சூரன்ஸ் பாலிசி (லைஃப் அல்லது ஹெல்த்)
மாநில/மத்திய அரசு/பொதுத்துறை நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய CGHS/ECHS/ESIC/Medi-claim கார்டு
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)