மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ஆம் தேதி 2024-25 நிதியாண்டுக்கான தனது ஏழாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பெண்கள், இளைஞர்கள், வேலை வாய்ப்பு, விவசாயம், ஏழைகள் என அனைத்து தரப்பினரும் பயனடைய கூடிய வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் குறிப்பாக தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 15 சதவீதம் என்பதிலிருந்து 6 சதவீதமாகவும் குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இந்தியாவில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து கொண்டிருக்க கூடிய நிலையில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த பொருளாதார பேராசிரியரான முத்துராஜ் கூறுகையில், அரசியலை தவிர்த்து பொருளாதார பார்வையில் பார்க்கும் பொழுது பெண்கள் முன்னேற்றம், நகர் மயமாதல், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு இப்படி பலவற்றை பார்க்கும் பொழுது இந்த பட்ஜெட் தாக்கல் சிறப்பானதாகத்தான் இருக்கின்றது.
எஸ்.டி.ஜி.,யின் அறிக்கையின் படி தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் எல்லாம் முதன்மை நிலையில் இருந்த நிலையில் பீகார், அசாம், ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் எல்லாம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த காரணத்தினால் தான் இந்த பட்ஜெட்டை நான் ஆந்திர பிரதேசம்,பீகார் மோடி பட்ஜெட் என்று சொல்லுவேன். அதற்கு காரணம் என்னவென்றால் நீடித்த நிலைத்த வளர்ச்சி குறியீட்டு அடிப்படையில் ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. அதனால் தான் என்னவோ இந்த பட்ஜெட் அதற்காக ஒதுக்கீடு செய்திருக்கலாம்.
இப்படி இருக்கக்கூடிய இந்த வரவு செலவுத் திட்டத்தில் முக்கிய அம்சம் என்னவென்றால் தங்கத்தின் மீதான சுங்க வரியை குறைத்து இருக்கின்றார்கள். மேற்கத்திய நாடுகளில் தங்கம் என்பது ஒரு பொருளாதாரப் பொருள். ஆனால் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் தங்கம் என்பது பொருளாதாரத்தை தாண்டி ஒரு கலாச்சார பொருள். ஆகையால் எப்படி இருக்க கூடிய சூழ்நிலையில் இந்தியாவில் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டு இருப்பது பெரிய முன்னேற்றத்தை நோக்கி செல்லக்கூடிய பாதை. அதே சமயத்தில் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டு இருப்பது முதலீட்டாளர்கள் இடத்திலிருந்து பார்க்கும் பொழுது கவலையாக உள்ளது.
ஏனென்றால், தங்கத்தை கையிருப்பு வைத்திருந்தவர்கள் தங்கத்தின் விலை குறையும் பொழுது அவர்களுடைய உண்மை மதிப்பு குறையும். குறுகிய காலகட்டத்தில் தான் இப்படி இருக்கும் ஏனென்றால் தங்கத்தின் தேவை மேலும் மேலும் அதிகரிக்கும் பொழுது தங்கத்தின் விலை கட்டாயமாக மீண்டும் அதிகரிக்கும். ஆகையால் வரும் காலங்களில் அரசாங்கம் தங்கத்தின் விலை மற்றும் வரி மாற்றி அமைப்பு மூலமாகவும் பொதுமக்களுக்கு தங்கம் கிடைக்கும் வாயிலாக செய்ய வேண்டும்.
அதேபோல் கட்டாயமாக தங்கத்தில் முதலீடு செய்யலாம். ஏனென்றால் தற்போது தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதுதான் தங்கத்தின் முதலீடு செய்வதற்கு சரியான நேரம். இன்னும் ஒரு மாதமோ அல்லது மூன்று மாதத்திலோ தங்கத்தின் விலை சற்று கூடும். ஏனென்றால் முதலீடு என்பது குறைந்த விலைக்கு வாங்கி அதன் மதிப்பை கூட்டுவது தான்.
இந்த ஒரு மாதத்தில் யாரெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களோ அவர்கள் புத்திசாலித்தனம் வாய்ந்தவர்கள் என்று சொல்லுவேன். காரணம் குறைந்தது 10% இருந்து 20% வரை ஒரு வங்கியில் கிடைக்கும் வட்டி வீதத்தை விட அதிகமான லாபம் கிடைக்கும். ஆகையால் பணம் வைத்திருக்கும் பொதுமக்கள் அனைவரும் தற்பொழுது அதாவது இந்த 20 நாட்களுக்குள் தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலமாக லாபம் அதிகமாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
