• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உலகின் மிகப்பெரிய மாம்பழ ஏற்றுமதி நிறுவனம் எது தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்

GenevaTimes by GenevaTimes
July 26, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
உலகின் மிகப்பெரிய மாம்பழ ஏற்றுமதி நிறுவனம் எது தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெட்ரோலியம், தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வணிகம் என பரந்த தொழில் சாம்ராஜ்ஜியத்திற்கு பெயர் பெற்ற முகேஷ் அம்பானி, விவசாயத்தில் வியக்கத்தக்க, அதே சமயம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது தலைமையின் கீழ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உலகின் மிகப்பெரிய மாம்பழ ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. ஒரு தொழில்துறை நிறுவனத்தில் இருந்து ஒரு விவசாய ஆற்றல் மையமாக வளர்ந்துள்ள இந்த மாற்றம் ஊக்கமளிப்பதாக உள்ளது.

1997ம் ஆண்டு குஜராத்தில் உள்ள ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையில் கடுமையான மாசு பிரச்சினைகளை ரிலையன்ஸ் எதிர்கொண்டபோது, இந்த பயணம் தொடங்கியது. சுற்றுச்சூழல் கவலைகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் எச்சரிக்கைகளுக்கு தீர்வு காண, தங்களது சுத்திகரிப்பு நிலையத்தைச் சுற்றியுள்ள தரிசு நிலங்களை பசுமையான மாம்பழத் தோட்டமாக மாற்ற முடிவு செய்தது ரிலையன்ஸ் நிறுவனம். இந்த முன்முயற்சியானது மாசுபாட்டைக் குறைப்பதையும் தொழில்துறை பகுதியைச் சுற்றிலும் ஒரு நிலையான பசுமை மண்டலத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது.

விளம்பரம்

ரிலையன்ஸ் நிறுவனரின் பெயரான திருபாய் அம்பானி லக்கிபாக் அம்ராயி என்று பெயரிடப்பட்ட இந்த பழத்தோட்டம், 600 ஏக்கர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட வகைகளை உள்ளடக்கிய 1.3 லட்சத்துக்கும் அதிகமான மா மரங்களைக் கொண்டுள்ளது. 16ம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் அக்பரால் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க லக்கிபாக் பழத்தோட்டத்தை இந்த பெயரை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு இந்தப் பெயரை வைத்துள்ளனர்.

அதிக உப்புத்தன்மை மற்றும் வறண்ட நிலை போன்ற சவால்களை சமாளிக்க, ரிலையன்ஸ் பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை செயல்படுத்தியது. பழத்தோட்டத்திற்கு சுத்தமான தண்ணீரை வழங்குவதற்காக உப்பு நீக்கும் ஆலையை அவர்கள் அமைத்தனர். இதன் காரணமாக இப்பகுதியில் மாசு அளவு கணிசமாகக் குறைந்தது. பழத்தோட்டம் செழிப்பாக இருக்க நீர் சேகரிப்பு, சொட்டு நீர் பாசனம் மற்றும் ஒரே நேரத்தில் உரமிடுதல் போன்ற மேம்பட்ட விவசாய நுட்பங்களையும் பயன்படுத்தினர்.

விளம்பரம்

இதையும் படிக்க: வாட்ஸ்அப்பில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது எப்படி? – ஈஸியான வழிமுறை இதோ!

இந்தப் பழத்தோட்டத்தில் கேசர், அல்போன்சோ, ரத்னா, சிந்து, நீலம் மற்றும் அம்ரபாலி போன்ற பிரபலமான இந்திய வகைகளும், புளோரிடாவைச் சேர்ந்த டாமி அட்கின்ஸ் மற்றும் கென்ட் போன்ற சர்வதேச வகைகளும், இஸ்ரேலைச் சேர்ந்த லில்லி, கெய்ட் மற்றும் மாயா போன்ற பல்வேறு வகையான மாம்பழங்களும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 600 டன் உயர்தர மாம்பழங்களை இந்த பழத்தோட்டம் உற்பத்தி செய்கிறது. அவை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் விற்கப்படுகின்றன. இதன் மூலம் ஆசியாவின் மிகப்பெரிய மாம்பழ ஏற்றுமதியாளராக ரிலையன்ஸ் திகழ்கிறது.

விளம்பரம்

ஆண்டுதோறும் ஒரு லட்சம் இலவச மரக்கன்றுகளை விநியோகித்தல் மற்றும் பழத்தோட்டத்தில் பயிற்சி வழங்குதல் என இந்நிறுவனம் உள்ளூர் விவசாயிகளை புதுமையான விவசாய முறைகளை பின்பற்ற ஊக்குவிக்கிறது. இந்த முன்முயற்சி உள்ளூர் விவசாயத்தை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மற்றும் சமூக மேம்பாட்டை மேம்படுத்துவதில் ரிலையன்ஸின் பங்கை வலுப்படுத்துவதாக உள்ளது.

இதையும் படிக்க: 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய ஆதாரை இன்னும் வச்சிருக்கீங்களா..? அப்ப இதை உடனே பண்ணுங்க!

மாம்பழ சாகுபடியில் முகேஷ் அம்பானியின் இந்த முயற்சி, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள மிகப்பெரும் தொழிலதிபர்கள் தங்கள் வளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் நிரூபிக்கிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! – SG Tamilan

Next Post

தைவானை மிரட்டிய கேமி புயல்!! மூழ்கிய கப்பல்!!

Next Post
தைவானை மிரட்டிய கேமி புயல்!! மூழ்கிய கப்பல்!!

தைவானை மிரட்டிய கேமி புயல்!! மூழ்கிய கப்பல்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin