உலகம் முழுவதும் ஏராளமானோர் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு சிலருக்கு ஊர் உலகத்தை சுற்றி வருவது ஆர்வமாக இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு வழக்கமான வேலைகள் பிடிப்பதில்லை. எனவே, உலகம் முழுவதும் பயணம் செய்து, பல்வேறு இடங்களுக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால், அனைவருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. இருப்பினும், இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வாழ்க்கையை இவ்வாறு மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்.
இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த இவரின் பெயர் எலன் ஹார்டி. 23 வயதாகும் இவர் கடந்த 2 ஆண்டுகளாக பயணிகள் கப்பலில் பயணம் செய்து, உலகை சுற்றி வருகிறார். 2021 முதல் கப்பலில் தங்கியுள்ள இவர், உலகம் முழுவதும் பயணம் செய்கிறார். இதுவரை, ஆஸ்திரேலியா, பிஜி உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்றுள்ளார். கப்பலில் பயணிக்கும் இவர், அங்கேயே தனக்கான பணத்தையும் சம்பாதிக்கிறார் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
இதையும் படிங்க:
வாரம் ஒரு கார்.. பங்களா வீடு.. சினிமாவில் கொடிகட்டி பறந்த சூப்பர் ஸ்டார் நடுத்தெருவுக்கு வந்த கதை தெரியுமா?
தனது முதல் பயணத்தின்போது, கப்பலில் நடனக் கலைஞராக இணைந்த எலன் ஹார்டி, தற்போது ஒவ்வொரு நாளும் கப்பலில் இருக்கும் 3,000 பயணிகளை மகிழ்விக்கிறார். இதன் மூலம் பெரும் வருமானத்தை பெறும் எலன் ஹார்டி, கப்பலிலேயே 28 வயதான லூயிஸ் என்ற காதலனையும் கண்டுபிடித்து விட்டார். முதலில் சிங்கப்பூரில் லூயிஸை சந்தித்தார். அவர் கப்பல் மாலுமி குழுவின் உறுப்பினர். லூயிஸ் தற்காலிகமாக வேறொரு கப்பலில் நியமிக்கப்பட்டாலும், இறுதியில் எலன் ஹார்டி பணிபுரியும் கப்பலுக்கே மாற்றப்பட்டார். தற்போது இருவரும் சேர்ந்து உலகை சுற்றி வருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)